பெங்களூரு வில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவர் அன்கித் ( பெயர் மாற்றப்பட்டது).
பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த வாரம் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின்
இரு சக்கர வாகனத்தில் வேலை சம்பந்தமாக அனிகல் பகுதியை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக நடந்து விபத்தில் இவரின் தலையிலும், முதுகுதண்டு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், மேல் சிகிச்சைக் காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார்.
பின்னர், இரண்டு நாள் கழித்து அவருக்கு மூளை சாவு என மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.
மூளை சாவு-க்கு மருத்துவம் பார்க்க போதிய வசதி இல்லாததால் அன்கித்தின் பெற்றோர்கள்,
மனிதாபிமான அடிப்படைியில் அவரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மத்தித்தனர்.
இவரின் கைகள் இரண்டும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த நபருக்கு கொடுக்கப் பட்டது.
அக்கித்தின் கைகள் குளிர்பெட்டியில் அடைக்கப்பட்டு பெங்குளூரு வில் இருந்து
வெறும் மூன்றே மணி நேரத்தில் சுமார் 300 கி.மீ., தூரம் பயணித்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தது.
மேலும், மற்ற உறுப்புகள் மொத்தம் ஆறு பேருக்கு தானமாக கொடுக்கப் பட்டதாக அவரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
Thanks for Your Comments