புதுக்கோட்டை யில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மின் இணைப்பு வழங்க
நகராட்சி ஊழியர் ஒருவர், பணம் கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந் துள்ளன. இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது.
மின்சாரம் இருந்தால் தான் குடிநீர் விநியோகம், நீரேற்றல் போன்ற பணிகள் நடக்கும் என்ற நிலையில், மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கரூர், ஈரோடு, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த
2500 மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மழையையும் பொருட் படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை அடப்பன் வயல் பகுதியில், புயலால் துண்டிக்கப்பட்ட
மின் இணைப்பை மீண்டும் வழங்க ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி யுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி ஊழியர் விஜயன், வீடு ஒன்றுக்கு 500 ரூபாய் கேட்பதும்,
பணம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இல்லை யென்றால் தாமதமாகும் என்றும் அந்த ஊழியர் பேசியது அம்பலமாகி யுள்ளது.
கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.
மின் இணைப்புக்கு ரூ.500 லஞ்சம் கேட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
என புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.
மின் இணைப்புக்கு கட்டணம் வாங்குமாறு யாரிடமும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments