ஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து எவ்வளவு தெரியுமா?

0
"ஒரு ஏழைத் தாயின் மகன்.." என்று ஒரு குரலை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். 
ஏழை விவசாய மனைவி
தற்போது அதே டோனில் "நான் ஒரு ஏழை விவசாயி" என்று அறிவித் திருக்கிறார் ஒரு தெங்கானா அப்பாவி அரசியல்வாதி.

தெலுங்கானா

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தனியாக பிரிந்தே ஆக வேண்டும், ஒரு குறிப்பிட்ட தெங்கர்களுக்கு 

ஆந்திராவில் இருந்து பிரிந்தால் ஒழிய நல்லது நடக்க வாய்ப்பே இல்லை என்று கதறி கதறி தெலுங்கானாவை 

தனியாக பிரிந்துக் கொண்டு போன சந்திரசேகர ராவின் மகன் கே டி ராமா ராவ் தான் அந்த ஏழை விவசாயி.

2014 தேர்தல்

தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்த பின் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் தேர்தல் ஆணையத்து க்கு 

சமர்பித்து சொத்து மதிப்பு விவரங்களில் "சட்டமன்ற உறுப்பினர்" என மட்டுமே குறிப்பிட்டு இருந்தார். 
சொத்து விவரம்
ஆனால் தற்போது நடக்க இருக்கும் தெங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு அவர் சிரிசிலா என்கிற தொகுதி நிற்க இருக்கிறார். 

அதற்கு தேர்தல் ஆணையத் திடம் சமர்பித்திருக்கும் சொத்து மதிப்பு விவரங்களில் "விவசாயி" என மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார்.

சொத்து விவரம்

இந்த ஏழை விவசாயிக்கு (ராமா ராவுக்கு) வருமானமாக 14,57,036 ரூபாய், விவசாய வருமானம் 59,85,000 ரூபாய், 

அசையும் சொத்து 3.63 கோடி ரூபாய், அசையா சொத்து 1.30 கோடி ரூபாய் இந்த கணக்கு எல்லாம் கே டி ராமா ராவின் சொத்துக்கள் மட்டுமே... 

ராமா ராவ் நிறைய சினிமா எல்லாம் பார்த்து தெளிவாக அவருடைய மனைவி பெயரில் தான் அதிகம் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார், 

அந்த கணக்கு தான் "என்ன வசி.. தல சுத்துதா..?" என்கிற ரீதியில் இருக்கிறது.

மனைவி சொத்து

வருமானமாக 3.55 கோடி ரூபாய், விவசாய வருமானம் 24,65,000 ரூபாய், கூட்டு நிறுவனத்தில் 

(Partnership Firm) இருந்து வரும் லாபங்கள் 79,65,688 ரூபாய், அசையும் சொத்து 27.70 கோடி ரூபாய், 
மனைவி சொத்து
அசையா சொத்து 6.66 கோடி ரூபாய், பரம்பரைச் சொத்துக்கள் மட்டும் 2.32 கோடி ரூபாய். 

இவரை நம்பி ஒரு மகள் இருக்கிறாள். மகளின் பெயரிலும் 19,59,692 ரூபாய் மதிப்பிளான சொத்துக்கள் இருக்கின்ற னவாம்.

பெருக்கல் வாய்ப்பாடு

கே டி ராமா ராவின் சொத்துக்கள் 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது 40 சதவிகிதம் அதிகரித் திருக்கிறது. 

ஆனால் கே டி ராமா ராவின் மனைவி ஷைலிமாவின் சொத்துக்கள் அதே நான்கு ஆண்டு காலகட்டத்தில் 10 மடங்குக்கு மேல் அதிகரித் திருக்கிறதாம். 

அதென்னங்க டிரைவிங் லைசென்ஸு க்கும் பஜ்ஜி கடை முருகனுக்கு ஒரு லிங்க் என்பது போல இந்திய மக்கள் வாய் பிழந்து பார்க்கிறார்கள்.

மதிப்புங்க

இதைக் குறித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் "சின்னய்யா வெச்சிருந்த சொத்துங்க மதிப்பு தான் அதிகரிச்சிருக்கு, அவர் புதுசா சொத்து எல்லாம் சேக்கல. 
சந்திரசேகர ராவ்
அவர் 2014-ல 4 கோடி ரூபாய் சொத்துக்களச் சொன்னாரு, இப்ப 2018-ல அவரோட சொத்து மதிப்பு அதிகரிப்பால 5.7 கோடி ரூபாயா இப்ப தெரியுது" என கொஞ்சுகிறார்கள்.

சின்னம்மா...?

சின்னய்யா சரிங்க, சின்னைய்யா வோட மனைவி ஷைலிமா மேடத்துக்கு (சின்னம்மாவு க்கு) 2014-ல வெறும் 4.20 கோடி ரூபாயாக இருந்த சொத்து 

எப்படிங்க 46 கோடியாக அதிகரிச்சுது எனக் கேட்டால் பதில் இல்லை. போங்க தம்பி ரொம்ப குறும்பு நீங்க என்கிறார்கள்.

நெட்டிசன்கள் பதில்

சந்திரசேகர ராவ், முதல் முறை முதல்வர் பதவி இறங்குறதுக்கு உள்ளேயே சுருட்ட ஆரம்பிச் சிட்டீங்களா...? என நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள். 

எது எப்படியோ 10 மடங்கு சொத்து அதிகரிப்பை நேரடியாக ஒப்புக் கொள்கிறார்களே 
விவசாய மனைவியின் சொத்து
அதுவே பெரிய விஷயம் தான் என ஒரு பக்க நெட்டிசன்கள் என்றால்... "சார் சொன்னதே இவ்வளவு மடங்குன்னா... 

சொல்லாதது எவ்வளவு மடங்கு இருக்கும்னு பாருங்க" என கொந்தளிக் கிறார்கள் மறு பக்க நெட்டிசன்கள். 

எது எப்படியோ அவங்களுக்கு ட்ரோல் பண்ண இன்னொரு ஏழைத் தாயின் மகன் கிடைச்சிட்டாருங்க.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings