தஞ்சை மாவட்டம் தெலுங்கன்குடிகாடு அருகே புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள்
துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பார்வையிட சென்றனர்.
அப்போது உரிய நிவாரணம் கிடைக்க வில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 நாட்களாக உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப் படுவதாகவும்,
சேதமடைந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மக்களிடையே சமரசத்தில் ஈடுபட்ட வைத்திலிங்கம், மோசமான வார்த்தை களை பயன்படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments