பிரியாணி கடைகளுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது?’

0
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அண்மையில் ஜோத்பூரி லிருந்து மன்னார்குடி சென்ற 
ரயிலில் சுமார் 2,000 கிலோ அளவிலான இறைச்சியை மாநில உணவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 

அந்த இறைச்சி தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் தொற்றிக் கொண்டன. 


பிடிபட்டது நாய் இறைச்சியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்றது. 

அதுபற்றி உணவுத்துறை அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில், 

கைப்பற்றப்பட்ட இறைச்சி முழுவதும் நாய் இறைச்சி என்று செய்திகள் வெளியாகின. 

எழும்பூர் ரயில் நிலையித்தில் பிடிபட்ட இறைச்சி பற்றியும், 

இதனால் சென்னையில் உள்ள அசைவ உணவகங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றியும் 

பிரபல பிரியாணிக் கடை உரிமையாளர் சௌத்ரி சிக்கந்தரிடம் பேசினோம்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய் இறைச்சி தானா?

நாய் இறைச்சியாக இருக்க வாய்ப்புகள் குறைவுதான். ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பியே அதைக் கண்டுபிடிக்க முடியும். 

யார் கலப்படம் செய்தாலும், பொருளை மாற்றி விற்றாலும் அது தண்டனைக் குரியக் குற்றமே. 

அதே வேளையில் ஆய்வுகளுக்கு முன்பே பரவும் இது போன்ற சர்ச்சைகளால் பெரிதும் பாதிக்கப் படுவது எங்களைப் போன்று சரியான முறையில் தொழில் நடத்துபவர்கள் தாம். 

இது மாதிரியான சர்ச்சைகளைத் தடுக்க முதலில், எவ்வளவு கிலோ இறைச்சி பிடிபட்டது? 

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி அதிகாரிகள், மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இறைச்சியைப் பார்த்தவுடன் அது ஆட்டிறைச்சி அல்லது நாய் இறைச்சி என்று சொல்லிவிட முடியுமா?

அதுபோன்று யாராலும் சொல்ல முடியாது. இந்தியாவில் 431 வகையான ஆடுகள் உள்ளன. 


அவற்றில் ஒருவகை ஆட்டின் இறைச்சியாகக் கூட பிடிபட்ட இறைச்சி இருக்கக் கூடும். 

அதற்காகத் தான், நாங்கள் அதை நிரூபிக்க வலியுறுத்துகிறோம்.

நாய் இறைச்சியா என்பதைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் என்ன?’

டி.என்.ஏ சோதனை மூலமாகத்தான் அதைக் கண்டறிய முடியும். 

இறைச்சியின் நிறத்தை மட்டும் வைத்துக் கண்டு பிடிப்பதற்கான வசதிகள் இங்கு இல்லை. 

உணவுப் பாதுகாப்புத் துறையினர் கொடுக்கும் அறிக்கை தான் சரியானதாக இருக்க முடியும். 

தமிழகத்தில் உள்ள வசதிகளை வைத்து, உடனே முடிவுகளைச் சொல்ல முடியாது. 

ஆய்வு செய்வதற்குக் குறைந்தது 10 நாள்களாவது ஆகலாம்.

எதனுடைய இறைச்சி என்பதைத் தாண்டி, அது கெட்டுப்போன இறைச்சி என்று சொல்லப் படுகிறதே

கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் கூடத்தான் கெட்டுப் போகின்றன. ஆனால், அவை விற்பனைக்கு வந்ததா என்பது தான் கேள்வி. 

அழுகிய இறைச்சி சமையலுக்குச் செல்கிறதா, குப்பைக்குச் செல்கிறதா என்பதை த்தான் ஆராய வேண்டும்.

கெட்டுப் போன இறைச்சியை ஹோட்டல் உரிமை யாளர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என உறுதியாகச் சொல்ல முடியுமா?

இங்கே, இறைச்சியை மட்டும் குறைசொல்ல முடியாது. காய்கறிகள், பழங்கள் என எல்லா வற்றையும் ஹோட்டலில் வீணானதைப் 

பயன்படுத்து கிறார்கள் என்பது தானே உங்களின் மனநிலையாக உள்ளது. மக்களை ஏமாற்றிச் சம்பாதிக்க வேண்டும் என்று யாரும் எண்ண மாட்டார்கள். 

தேவைப் பட்டால், சற்றே விலையை அதிகப்படுத்தி விற்பார்களே தவிர, கெட்டுப் போனவற்றை யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.’’

இறைச்சி தொடர்பான இந்தச் சம்பவத்தை எப்படித்தான் எதிர்கொள்வது?


இறைச்சி எங்கிருந்து வந்ததோ, அந்த ரயில் நிலையத்தில் அதிகாரிகள் இருந்திருப் பார்கள். 

அவர்களின் அனுமதியோடு தான், இங்கு கொண்டு வரப்பட்டிருக் கிறது. 

அதே போல், வெளி மாநிலங்களி லிருந்து இறைச்சிகள் வாங்கக் கூடாது என்றால் அதற்கான தடையை அரசு அறிவிக்க வேண்டியது தானே. 

இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்ற இதுவரை தெரிய வில்லை.

இந்தச் சோதனையின் பின்னணியில் சதி ஏதும் உள்ளதாகக் கருதுகிறீர்களா?

சந்தேகம் எழத்தான் செய்கிறது. கோழி இறைச்சி, மீன், முட்டை போன்ற வற்றுக்கு எல்லாம் இது போன்ற பிரச்னை எழவில்லை. 

தொடர்ந்து ஆட்டு இறைச்சிக்கு மட்டும் பிரச்னை வந்து கொண்டிருப்பது தான் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

ஏன் ஆட்டு இறைச்சி மட்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப் படுகின்றது?

அது தான் தெரியவில்லை. அதேபோல் இந்தப் பிரச்னைகள் எல்லாம் சென்னையில் மட்டுமே நடப்பது போல சித்திரிக்கப் படுகின்றன. 

பிரியாணி யில் ஆட்டிறைச்சி என்பது ஒரு பகுதிதான். அதில் மிச்சம் செய்து எவ்வளவு சேமித்து விட முடியும்? 

இந்தச் சர்ச்சையால் பிரியாணி விற்பனை சென்னையில் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.


சென்னையில் உள்ள கடைகளுக்கு எங்கிருந்து இறைச்சி வருகிறது?

சென்னைக்கு 75 சதவிகிதம் அளவுக்கு இங்கிருந்து தான் ஆட்டிறைச்சி வாங்கப் படுகிறது. 
எஞ்சிய 25 சதவிகிதம் மட்டுமே வெளி மாநிலங்களி லிருந்து கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்தில் நாய் இறைச்சி சர்ச்சையால் குழப்பம் அடைந்துள்ள மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

"இறைச்சி வியாபாரம் செய்பவர்கள் எல்லாருமே, மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருப் பவர்கள் தாம். 

அவர்கள், மற்றவர்களை ஏமாற்ற மாட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து."

இணையங்கள் மூலம் சிலர் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இறைச்சி தொழிலில் உள்ளவர் களுக்குப் பாதிப்பு ஏற்படுமா?

இணையத்தில் இறைச்சி விற்பவர்களின் கடைகள் எங்கே இருக்கின்றன என்பது தெரிய வில்லை. 


அவர்களுக்குப் பாதிப்பு என்பதை விடவும், இறைச்சியை வாங்கி தொழில் நடத்தும் எங்களைப் போன்றவர் களுக்குத் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பொது மக்களாகிய வாடிக்கை யாளர்கள், பிரியாணி கடைகளில் இறைச்சியை எங்கிருந்து வாங்குகிறீர்கள் என்ற கேட்க எல்லா உரிமையும் உள்ளது. 

எனவே, மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவை யில்லை’’ என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings