சரியாக 10 ஆண்டு களுக்கு முன்பு இதே நாளில் கடல் வழியாக மும்பையை அடைந்த பயங்கர வாதிகள் கையில்
இயந்திரத் துப்பாக்கி யுடன் பல முக்கிய இடங்களு க்குச் சென்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொன்றனர்.
இதில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் என 166 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த வர்களில் 9 வயது தேவிகா நட்வர்லால் ரோடாவானும் ஒருவர்.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தூக்கிலிடப் பட்ட பயங்கரவாதி கசாப் சுட்டதில் இவரது காலில் குண்டு பாய்ந்தது.
சிகிச்சையின் பலனாக உயிர் பிழைத்தார் தேவிகா.
இவர்தான் கசாப்பின் மகள் என அடையாளம் காணப்ப ட்டவர். என்ன கசாப்பின் மகளா? ஆம்.. சரியாகத் தான் சொல்கிறோம். கசாப்பின் மகள்.
பயங்கர வாதிகளை நேரில் பார்த்த ஒரே சாட்சியாக இருந்தார் இவர்.
நீதி மன்றத்தில் கசாப் தன்னை சுட்டார் என்று இவர் அளித்த வாக்கு மூலமே, தூக்கு தண்டனையை வழங்க எளிதாக இருந்தது.
வழக்கின் விசாரணை யின் போது இவரது அடையாளம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக
அரசு வழக்குரைஞர் இவரது பெயரைக் குறிப்பிடாமல் கசாப்பின் சாட்சியம் என்பதை
கசாப் + மகள் (பெண்) என்று அடைமொழியில் அழைக்க அதுவே கசாப்பின் மகளாக மாறியது.
தற்போது 19 வயதாகிறது தேவிகாவு க்கு. மெல்ல அவரது அடையாளம் ஊடகங்கள் மூலம் பரவியது.
10 ஆண்டுகளு க்கு முன் தனக்கு நேர்ந்த துயரம் குறித்தும், அதன் பிறகு தான் கடந்து வந்த முள்பாதை குறித்தும் தற்போது அவர் வாய் திறந்துள்ளார்.
கசாப்புக்கு எதிராக சாட்சியம் சொல்வது குறித்து எனது பள்ளியில் தெரிந்ததால், என்னுடன் பேசக் கூட நண்பர்கள் பயந்தார்கள்.
என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள், எனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால்,
என்னுடன் இருப்பவர் களையும் அது பாதிக்கலாம் என்ற அடிப்படை யில் அந்த அச்சம் இருந்தது.
ஒரே அறை கொண்ட தனது வீட்டில் தந்தை மற்றும் 2 இளைய சகோதரர் களுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தின் போது அரசு அறிவித்த வீடு உள்ளிட்ட எந்த சலுகையும் இது வரை தனக்குக் கிட்ட வில்லை என்றும்,
10 ஆண்டு களையும் கடந்து பல்வேறு இன்னல் களை சந்தித்து வரும் தேவிகா கலங்கிய கண்களோடு கூறுகிறார்.
தனக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளைக் கூட அவர் கேட்க வில்லை,
பயங்கர வாதத்தை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கசாப் போன்ற வர்கள் சிறிய மீன்கள். அவனைப் பிடித்து விட்டால் கடல் சுத்தமாகி விடாது.
பயங்கர வாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று கூறுகிறார் தேவிகா தீரத்தோடு.
Thanks for Your Comments