வீட்டை சோதனை யிட வந்ததால், தெலங்கானா மாநில காங்கிரஸ் வேட்பாளர் தற்கொலை க்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கிறது.
இதில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவரும் முதலமைச்ச ருமான சந்திரசேகர் ராவ், கஜ்வெல் தொகுதியில் போட்டி யிடுகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வெண்டேரு பிரதாப் ரெட்டி என்பவர் போட்டி யிடுகிறார்.
பிரசாரம் தீவிர மடைந்துள்ள நிலையில், பிரதாப் ரெட்டி, வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்வதாக புகார் எழுந்தது.
இதை யடுத்து போலீசார் ஐதராபாத்தில் புறநகர் பகுதியான கொம்பள்ளி யில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்றிரவு சென்றனர்.
சோதனையில் ஈடுபட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த பிரதாப் ரெட்டி, அவர்களை வீட்டுக்குள் விட வில்லை.
மீறி உள்ளே சென்ற அவர்கள் முன்பு, பெட்ரோல் பாட்டிலை எடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை தீக்குளிப்பதில் இருந்து தடுத்தனர். பின்னர் அவர் கைது செய்யப் பட்டார்.
இதுபற்றி காங்கிரஸ் தரப்பில் கூறும் போது, ’சோதனைகள் என்ற பெயரில் போலீசார்,
காங்கிரஸ் வேட்பாளர் களையும் தொண்டர் களையும் மிரட்டும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்திரசேகர் ராவ், எர்ரவல்லி யில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து வாக்காளர் களுக்கு பண பட்டு வாடா செய்து வருகிறார்.
நாங்கள் இது பற்றி எழுத்துப் பூர்வமான புகார் அளிக்கிறோம்.
அங்கு சென்று சோதனை நடத்த இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினர்.
Thanks for Your Comments