டில்லியில் கடந்த 11ம் தேதியில் டில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்றை
ஓட்டுதற்காக பணி ஒதுக்கப்பட்ட விமானி குடிபோதையில் விமானம் ஓட்ட வந்துள்ளார்.
அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அது தெரிய வந்ததால் அவருக்கு பதிலாக வேறு ஒரு பைலட் கொண்டு விமானம் இயக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி பகலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது டில்லி விமான நிலையம்.
தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம் என்பதாலும்,
நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையம் என்பதாலும் அதிக பாதுகாப்புகளுடன் உள்ள விமான நிலையமாக இது உள்ளது.
இங்கிருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் தினமும் பறந்து வருகின்றன.
நாட்டின் பல முக்கிய தலைவர்களும், சில வெளிநாட்டு தலைவர்களும் இந்த விமான நிலையத்தை தான் அதிகம் பயன்படுத்து கின்றனர்.
கடந்த 11ம் தேதியன்று பரபரப்பாக விமான நிலையம் இயங்கிய சூழ்நிலையில் மதியம் 2.45 மணிக்கு
டில்லியில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயார் செய்யப்பட்டு வந்தது.
அந்த விமானத்தில் பயணிக்க கூடிய பயணிகளும் ஒவ்வொருவராக விமான நிலையத்திற்கு வந்து
தங்களது சோதனைகள், இமிகிரேஷன் பிராஸஸ்களை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் விமானத்தை இயக்குவதற் கான விமானிக்கான சோதனையும் நடந்தது.
இந்த விமானத்தை இயக்குவதற் காக அரவிந்த் கத்பாலியா என்பவருக்கு பணி ஒதுக்கப் பட்டிருந்தது.
Thanks for Your Comments