அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் தான், போட்டியிடப் போவது இல்லை
என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித் துள்ளார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே செய்தி யாளர்களை சந்தித்த சுஷ்மா, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமது முடிவை கட்சி மேலிடத்தில் தெரிவித்து விட்ட தாகவும், தனது உடல் நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ள தாகவும் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
66 வயதாகும், சுஷ்மாவிற்கு கிட்னி பிரச்சினை இருந்து வந்தது. எனவே, அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
சமீப காலமாக நாடாளு மன்றத்திற்கு தொடர்ச்சியாக செல்லாமல் இருந்து வருகிறார்.
இவர் ம.பி மாநிலத்தின், விதிஷா தொகுதியி லிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
நாடாளு மன்றத்திற்கு தொடர்ச்சியாக சுஷ்மா செல்வதில்லை என்பதை விமர்சனம் செய்து விதிஷா தொகுதியில் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டி யிருந்தனர்.
இது தொடர்பான நிருபர்கள் கேள்விக்கு தான், சுஷ்மா இந்த தகவலை தெரிவித்தார்.
Thanks for Your Comments