தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பாகிஸ்தானின் துணிச்சல் பெண் எஸ்.பி !

0
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்டு, சீனத் தூதரக அதிகாரிகள் பலரை பெண் எஸ்.பி. ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பாகிஸ்தானின் துணிச்சல் பெண் எஸ்.பி !
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகத்தின் மீது நேற்று தீவிரவாதிகள் 3 பேர் துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினார்கள். 

அந்தத் தூதரகத்து க்கு பெண்.எஸ்பி. சுஹாய் அஜிஸ் தல்பூர் தலைமை யில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தீவிரவாதிகள் தாக்கத் தொடங்கி யுடன் பெண் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர் தலைமை யிலான படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தினார். 

இரு தரப்புக்கும் இடையே நடந்த தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.அந்தத் தீவிரவாதிகள் 3 பேரும் பலூச் கிளர்ச்சிப்படை எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். 

அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட வற்றை போலீஸார் கைப்பற்றி னார்கள்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய வுடன் அவர்களுடன் சண்டை யிட்டு அவர்களை சுட்டுக் கொலை செய்த பெண் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூருக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுக் குவியத் தொடங்கி இருக்கிறது.
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள தாண்டோ முகமது கான் மாவட்டம், தல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர். 

மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரான எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர், சிறு வயதில் வறுமையின் காரணமாக உறவினர்களால் ஒதுக்கப் பட்டுள்ளார்

அதன்பின் கடின சூழலில் வளர்ந்து, பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு முடித்து, கடந்த 2013-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி போலீஸில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

பெண் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர் நிருபர்களிடம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து கூறியதாவது:
தீவிரவாதிகள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களுடனும், உணவுகள், மருந்துகள் ஆகிய வற்றுடன் இருந்ததைப் பார்க்கையில் அவர்கள் சீனத் தூதரகத்தை கைப்பற்றும் திட்டத்தோடு வந்திருக்கக் கூடும். 

ஆனால், அவர்கள் தூதரகத்தின் வாயிலை நெருங்கிய வுடன் போலீஸார் சுதாரித்துக் கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர். 

அனைவரும் சேர்ந்து நடத்திய தாக்குதலை தீவிரவாதி களால் சமாளிக்க முடிய வில்லை. இருந்தாலும் எங்கள் தரப்பில் இரு போலீஸார் கொல்லப் பட்டனர்.

என்னைச் சிறு வயதில் என் பெற்றோர் பள்ளியில் சேர்க்கும் போது உறவினர்கள் எல்லாம், பெண்களுக்கு எதற்கு படிப்பு என்று கிண்டல் செய்தனர். 

அதன் பின் சொந்த கிராமத்தில் இருந்து புறப்பட்டு, வேறு நகரத்துக்குக் குடி பெயர்ந்தோம்.என்னுடைய தந்தை அஜிஸ் தல்பூர், அரசியல் வாதியாக வும், எழுத்தாள ராகவும் இருந்தார். 

எனக்கு மதரீதியான கல்வியைத் தான் கொடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்திய போது, என் தந்தை தான் என்னை வெளியிடங் களுக்குச் சென்று படிக்க வைத்தார்.
பள்ளிப் படிப்பை முடித்து, சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஜுபைதா மகளிர் கல்லூரியில் பி.காம் முடித்தேன். 

நான் பட்டயக் கணக்காளராக வர வேண்டும் என்று குடும்பத்தினர் விரும் பினார்கள். ஆனால், சமூகத்தில் மதிப்புள்ள பணியைச் செய்ய வேண்டும் என விரும்பினேன். 

அதனால், கடினமாகப் படித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். எனக்குச் சிறுவயதில் இருந்தே இலக்கியம், வரலாற்று பாடத்தில் அதிக ஆர்வம் அதனால், 

அதே தேர்வு செய்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி போலீஸில் சேர்ந்தேன்.இவ்வாறு எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர் தெரிவித்தார். ...இந்து
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings