இன்சுலின் குளிரைக் குறைப்பதற்காக இன்சுலின் குப்பியை (Insulin vial) 10-15 நிமிடங்கள் முன்பே குளிரூட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைக்கவும்.
இன்சுலின் குளிராக இருந்தால் நோ ஏற்படும். இன்சுலின் குப்பியை (Insulin vial) தொட முன்பு உங்கள் கைகளை சவர்க்காரம் பாவித்து நன்கு கழுவி உலர்ந்த துணியால் கைகளை நன்கு துடைக்கவும்.
இது ஊசிபோடும் போது கிருமித் தொற்றுக்களை தடுக்கும். ஊசி போடும் இடத்தை நன்கு சவர்க்காரம் நீர் கொண்டு நன்கு கழுவி உலர்ந்த துணியால் துடைக்கவும்.
இன்சுலின் குப்பியை (Insulin vial) எடுக்கவும். அதன் மேற்பகுதியை துடைக்கவும்.
தொற்று நீக்கம் செய்த சிறிஞ்சை (Syringe) ஊசியை பாவித்து இன்சுலினை இன்சுலின் குப்பியில் (Insulin vial) இருந்து எடுக்கவும்.
பின்னர் உரிய இடத்தில் மருந்தை ஏற்றவும். எவ்வாறு இன்சுலின் குப்பியில் (Insulin vial) இருந்து இன்சுலினை சிறிஞ்சில் (Syringe) எடுத்தல் இன்சுலின் குப்பியை (Insulin vial) எமது உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து சிறிது நேரம் உருட்டவும்.
பேனா (Pen) வகை இன்சுலின் பாவிப்பதாயின் 4-5 தடவை குலுக்கிய பின் பாவிக்கலாம். சிறிஞ் (Syringe) மூலம் உங்களுக்கு தேவையான இன்சுலினை எடுக்கவும்.
Thanks for Your Comments