அயோத்தியில் நாளை நடைபெற வுள்ள தர்மசபை நிகழ்ச்சி மற்றும் பேரணியில் பங்கேற்பதற் காக,
தனி ரயில் மூலம் 25ஆயிரம் சிவசேனா தொண்டர்கள் மும்பையில் இருந்து சென்றுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில்,
மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா உள்ளிட்ட
இந்துத்வா அமைப்புகள் சார்பில் நாளை உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி யில் தர்மசபை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதை யடுத்து, அசாதாரண சூழல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அயோத்தி யில் 144 தடை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஆனால், தடையை மீறி, பேரணி நடத்து வதற்காக மும்பையில் இருந்து 25 ஆயிரம் சிவசேனா தொண்டர்கள் தனி ரயில் மூலம் சென்றுள்ளனர்.
நாளை அவர்கள் அயோத்தியை அடைவார்கள் என கூறப்படும் நிலையில்,
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது மகன் ஆதித்ய தாக்கரே உடன் அயோத்தி சென்றுள்ளார்.
Thanks for Your Comments