உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

0
சிலர் தங்கள் வாழ்க்கையில் புகை பிடிக்காது இருந்திருந்தாலும் நுரையீரல் பிரச்சனை இருக்கலாம். 
உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
அதே சமயம், 45 வருடங்களாக புகைபிடிக்கும் ஒருவருக்கு நுரையீரல் பிரச்சனை இல்லாது ஆரோக்கியமாக இருக்கலாம். 

இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும. எவ்வாறு இருப்பினும், மூன்று நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி என்று பாரப்போம்.

இதை செய்வதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எந்த விதமான பால் பொருட்களையும் சாப்பிடாமல் அறவே ஒதுக்க வேண்டும். 

ஏனென்றால் பாலினால் உண்டாகும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதற்கு முதல் நாள் சுக்குமல்லி தேநீர் போன்ற எதாவது மூலிகை டீயைக் குடிக்கலாம். 

இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நுரையீரலுக்கு உடலில் உள்ள மற்ற உறுப்புகள் கூடுதல் வேலை தராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து 300 மில்லி தண்ணீரில் சேர்த்து காலை உணவுக்கு முன் குடிக்கவும். பின்பு சில மணி நேரங்களுக்கு பிறகு 300 மில்லி கிரேப்பூரூட் பழத்தின் சாறு குடிக்கவும். 
கிரேப்பூரூட் கிடைக்கா விட்டாலோ அல்லது சுவை பிடிக்கா விட்டாலோ 300 மில்லி அன்னாசி பழத்தின் சாற்றை குடிக்கவும். ஏனென்றால் இந்த சாறுகளில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 

இவை நமது சுவாச உறுப்புகளை மேம்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து மதிய உணவுக்கு முன்பு 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை குடிக்கவும். 

இந்த சாறு உங்கள் இரத்தத்தை இந்த மூன்று நாட்களுக்கு ஆல்களைஸ் செய்கின்றது. மதிய உணவுக்கு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த சாற்றைக் குடிக்கவும். 

பொட்டாசியம் ஒரு சிறந்த டானிக்காக மாறி இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகின்றது. படுக்க போகும் முன்பு 400 மில்லி கிரேன்பரி சாறு குடிக்கவும். 

இந்த சாறு நுரையீரலிலுள்ள நோய்களை உண்டாக்கும் பாக்ட்டீரியாக் களை வெளி யேற்றுகின்றது. உங்கள் உடலை நன்றாக கவனித்துக் கொள்ளவும். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் 20 நிமிடங்கள் சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். இதனால் குளிக்கும் போது சூட்டினால் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேறு கின்றது.
இரவு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் 5-10 துளிகள் யூகாலிப்ட்டஸ் ஆயிலை சேரத்து தலையை சுத்தமான துணியினால் மூடி ஆவி பிடிக்கவும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings