சமூக ஊடகத்தையும் வைரல் வீடியோவையும் பிரிக்கவே முடியாது போல. தினம் தினம் எப்படி எப்படி எல்லாம் புதிது புதிதாக வீடியோ வெளியாகிறது.
இந்தோனேஷியா, பாலி நகரிலுள்ள நகுரா ராய் விமான நிலையத்தில் இருந்து ஜகார்த்தா செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக பயணி ஒருவர் காத்திருந்தார்.
அவர் பயணிக்க இருந்த ‘சிட்டிலிங்’ விமானம் கிளம்புவதற்கு ஆயத்த மானது. அதனை முறைப்படி விமான நிலையத்தார் அறிவிப்பு செய்தனர்.
முதல் முறை தவற விட்டவர்கள் கவனிப்பதற் காக மீண்டும் இரண்டாவது முறையும் அறிவித்தனர்.
அதனையும் மீறி மூன்றாவது முறையும் அறிவிப்பு கொடுத்தனர்.
ஆனால் இந்த மூன்று முறை அறிவிப்பையும் அந்த பெண் பயணி கவனிக்காமல் இருந்துள்ளார்.
இறுதியில் விமானம் புறப்பட்ட போது அடித்து பிடித்துக் கொண்டு ஓடியுள்ளார்.
அதனை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். இருந்தும் அவர் மனம் பொறுக்க முடியாமல் கதறி அழுது கீழே புறண்டார்.
இறுதி விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர், ஹனா என தெரிய வந்துள்ளது.
அவர் விமானம் புறப்படுவதற்கு 10 நிமிடம் முன்பே நுழைவு வாயிலுக்குள் வந்துள்ளார். ஆனால் விமானத்தை பிடிப்பதற்குள் அது கிளம்பி யுள்ளது.
அவர் விமானம் புறப்படுவதை கண்டு பரிசோதனை அதிகாரிகளை கடந்து உள்ளே ஓடியுள்ளார்.
அக்காட்சிகள் சிசிடியில் பதிவாகி யுள்ளது. மேலும் அவர் தரையில் புரண்ட வீடியோவும் தற்போது வெளியாகி யுள்ளது.
சமூக வலைத் தளத்தில் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஹனா, தவறவிட்ட விமானத்திற்கு பதிலாக அடுத்த விமானத்தில் அவரை அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது.
Thanks for Your Comments