இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஐ.எம். விஜயன். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த கால்பந்து வீரர்களுள் இவரும் ஒருவர்.
இந்திய அணிக்காக 1989- ம் ஆண்டு முதல் 2004- ம் ஆண்டு வரை 66 சர்வதேச போட்டிகளில் விளையாடி யுள்ளார்.
29 கோல்களும் விஜயனின் கணக்கில் உள்ளன.
பூடான் அணிக்கு எதிராக ஆட்டம் தொடங்கிய 12 விநாடிகளில் கோல் அடித்தும் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஆட்டம் தொடங்கியதும் மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல்களில் இதுவும் ஒன்று.
மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் , சர்ச்சில் பிரதர்ஸ், எப்.சி கொச்சி போன்ற இந்தியாவின் பாரம்பர்யமிக்க கால்பந்து அணிகளுக் காகவும் விஜயன் ஆடியுள்ளார்.
தமிழில் 'திமிரு ' என்ற படத்தில் வில்லனாக வும் விஜயன் நடித்துள்ளார்.
சரி... இப்போது விஜயனைப் பற்றி பேச என்ன அவசியம் வந்தது என்கிற கேள்வி எழுகிறதா?
இந்தியாவுக் காகப் பல ஆண்டு காலம் கால்பந்து விளையாடி இருந்தாலும் விஜயனின் வங்கிக் கணக்கில் பெரிய அளவில் பணம் சேர்ந்து விடவில்லை.
கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகை யில் விஜயனுக்குக் கிடைத்தது சொற்பமே.
ஓய்வுக்குப் பிறகு பல கால்பந்து அணிகளுக்குப் பயிற்சி யாளராக பணியாற்றிய
விஜயன், 2012- ம் ஆண்டு மீண்டும் கேரளா போலீஸில் பணிக்குச் சேர்ந்தார்.
திருச்சூர் கேரளா போலீஸ் பட்டாலியனில் பணி புரிந்து வரும் விஜயன் தற்போது, சபரி மலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
சபரிமலை செல்லும் வழியில் சரங்குத்தி என்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும்
விஜயனை அடையாளம் கண்டு கொள்ளும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
'சபரிமலை விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் ' என்று ஐ.எம். விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments