உலகின் முதன் முறையாக நிலகரிக்கு கீழ் ஹொட்டல் !

0
உலகம் முழுவதும் பொதுவாக கைவிடப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்கங்கள் பயன்பாட்டின் 
பின்னர் மண்ணை நிரப்பப்பட்டு, சமன்படுத்தி வேறு வகையில் பயன் படுத்தப்படும்.


ஆனால், சீனாவின் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் கைவிடப்பட்ட 
ஒரு சுரங்கத்தை அப்படி செய்வதற்கு பதிலாக ஆடம்பர ஹொட்டலாக மாற்ற கடந்த 2013 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப் பட்டது. 

ஷங்காய் நகரின் மத்திய பகுதியில் இருந்து சுமார் ஒருமணி நேர பயண தூரத்தில் தற்போது 17 மாடி கட்டிடமாக 

‘இன்ட்டர் கான்ட்டினென்ட்டல் டிரீம்லேன்ட்’ என்ற பெயருடன் இந்த ஹொட்டல் கம்பீரமாக காட்சி யளிக்கிறது.
தரை பகுதியில் இருந்து பல மீட்டர் ஆழத்தில் கட்டப் பட்டுள்ள இந்த ஓட்டல் சமீபத்தில் திறப்பு விழா கண்டுள்ளது. 


சுமார் 30 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தீம் பார்க்குடன் உருவாகி யுள்ள இந்த ஓட்டலில் 336 அறைகள் உள்ளன.
இங்கு தங்குபவர்கள் மலையேற்றம், நீர்சறுக்கு போன்ற வற்றில் ஈடுபடலாம். 

இதில் ஓரிரவு தங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 3 ஆயிரத்து 394 யுவான்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings