மேம்பாலத்தில் கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தால், ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
சென்னை கல்பாக்கத்தைச் சேர்ந்தவர், தேவநாதன் (55). கல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர், தனது மனைவி மாலினி (48) மற்றும் மகள் ரம்யாவுடன் (18) இன்று காலை சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஓட்டுநர் பசூர் ரகுமார் (எ) பாபு, காரை (TN-19-1824) ஓட்டிக் கொண்டிருந்தார்.
இன்று காலை 9.45 மணியளவில் சின்ன சேலம் அம்மை அகரம் ரயில்வே மேம்பாலத்தைக் கடக்கும் போது,
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் இடதுபுறம் உள்ள கட்டையில் மோதி அதே வேகத்தில் வலதுபுறம் இருந்த கட்டையிலும் பலமாக மோதியது.
அதில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சின்ன சேலம் போலீஸார், உடல்களைக்
கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக கள்ளக்குறிச்சி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போனவர்களைப் பற்றிய முழு விவரம் தெரியாததால், அவர்களது செல்போனில் இருக்கும்
எண்களைக் கொண்டு உறவினர் களைத் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்கி யிருக்கின்றனர்.
மேலும், விபத்து குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி யிருக்கின்றனர் போலீஸார்.
Thanks for Your Comments