பயங்கரவாதிகள் கடத்திய போலீஸ் அதிகாரி கொலை - கிராமவாசிகளின் கதி?

0
காஷ்மீரில் பயங்கர வாதிகள் கடத்தி சென்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டறியப் பட்டது. 
அவருடன் கடத்தி செல்லப்பட்ட கிராம வாசிகள் இருவரை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட ரிபான் பகுதியை சேர்ந்தவர் பஷரத் அகமது வகாய். 


முன்னாள் போலீஸ் சிறப்பு அதிகாரியான இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டில் இருந்தார். 

அப்போது அங்கு வந்த பயங்கர வாதிகள் சிலர் பஷரத் அகமதுவை வலுக்கட்டாய மாக கடத்தி சென்றனர். 

அவருடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேரையும் அவர்கள் கடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராணுவமும், போலீசாரும் இணைந்து சோபியானில் தேடுதல் வேட்டை நடத்தினர். 

இதில் பஷரத் அகமது கொலை செய்யப் பட்டது தெரிய வந்தது. அவரது உடலை இரவில் போலீசார் மீட்டனர். 

மீதமுள்ள 2 பேரின் கதி என்ன? என்று தெரிய வில்லை. அவர்களை தேடி மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சோபியானில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 பேர் பயங்கர வாதிகளால் கடத்தப் பட்டனர். 

அதில் 7 பேர் பின்னர் விடுதலை செய்யப் பட்ட நிலையில், 2 இளைஞர்கள் கொல்லப் பட்டது குறிப்பிடத் தக்கது.

குல்காம் மாவட்டத்தின் குய்மோ-குத்வானி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது 


கடந்த 22-ந் தேதி காலையில் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தினர். 

அப்போது ராணுவத்து க்கும், பயங்கர வாதிகளுக்கும் இடையே நடந்த 

துப்பாக்கிச் சூட்டில் முஸ்கான் ஜன் என்ற சிறுமி காயமடைந்தார். 

ஸ்ரீநகர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரண மடைந்தார்.

இதைப் போல பட்காம் மாவட்டத்தின் சட்டர்கம் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே 

நேற்று முன்தினம் பயங்கர வாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இஷ்பாக் அகமது கனி என்பவர் காயமடைந் திருந்தார். 

அவரும் நேற்று ஸ்ரீநகர் மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப் போராவில் பயங்கர வாதிகள் 

மறைவிடம் ஒன்றை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டு பிடித்தனர். 


அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றிய அவர்கள், 

அந்த பதுங்கிடத்தை அழித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings