நில்லு, நில்லு சேலஞ் மேற்கொண்டால் நடவடிக்கை - கேரள காவல்துறை !

0
நில்லு, நில்லு சேலஞ்சை மேற்கொள்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள காவல்துறை எச்சரித்துள்ளது. 


ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ஃபிட்னஸ் சேலஞ்ச், கிகி சேலஞ்சுக்கு அடுத்த படியாக இணையத் தில் உருவெடுத்துள்ளது நில்லு நில்லு சேலஞ்ச்.

ரெயின் ரெயின் கம் அகெய்ன் (Rain Rain Come Again) என்ற மலையாள படத்தில், நில்லு, நில்லு என்டே நீலக்குயிலே (nillu nillu ente neela kuyile) பாடலை 

டிக் டாக், மியூசிகலி ஆப் மூலம் பயன்படுத்தி இந்த சேலஞ்ச் மேற்கொள்ளப் படுகிறது. 

ஓடும் பேருந்து, பைக், லாரி உள்ளிட்ட வாகனங்களின் முன் ஹெல்மெட் அணிந்தபடி, 

கையில் இலைகளைப் பிடித்துக் கொண்டு நடனமாடுவது புதிய சேலஞ்சாக இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதில், போலீசாரின் வாகனங் களையும் கூட நிறுத்தி நில்லு நில்லு சேலஞ்ச் மேற்கொள்ளப் படுகிறது. 

தமிழக பேருந்தை நிறுத்தியும் நடனமாடும் காட்சிகள் வெளியாகி யுள்ளன. போக்கு வரத்துக்கு இடையூறாக, 


திடீரென வாகனத்தை நிறுத்தி நடனமாடுவது எதிர்வரும் வாகனங்களில் பயணிப்போரு க்கும், சேலஞ்சை மேற்கொள் வோருக்கும், 
வேடிக்கை பார்க்கும் வாகன ஓட்டிகளு க்கும் ஆபத்தாகும் என சுட்டிக் காட்டியுள்ள 

கேரள காவல்துறை, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings