கன்னியாகுமரி மாவட்டம், சிதறால் பகுதியில் தனியார் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய
அரசுப் பேருந்து ஓட்டுநரை பொது மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் ஜெயன் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே
சிதறால் பகுதியில் என்.எம். வித்யாலயா கேந்திரா என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜெயன் என்பவர் பள்ளி வளாகத்து க்குள் அரிவாளுடன் ஆவேசமாகப் புகுந்தார்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மற்றும் பள்ளியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார்.
மேலும், அதே வளாகத்தில் செயல்பட்டு வந்த விடுதியில் புகுந்து கம்ப்யூட்டர், சலவை இயந்திரம் ஆகியவற்றை உடைத்தார்.
அப்போது பள்ளிக்கு வந்த 12-ம் வகுப்பு மாணவிகள் வர்ஷா, நந்தினி ஆகியோரை அரிவாளால் வெட்டினார்.
இதை தடுக்கச்சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஞானமுத்து, சுதீர் ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
பொது மக்கள் ஜெயனைப் பிடித்து அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயனின் மனைவி அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருவதாகவும்,
கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ள தாகவும்
இந்தப் பிரச்னை காரணமாக ஜெயன், பள்ளி வளாகத்தில் புகுந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments