சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்
மற்றும் புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார்.
நவீன இதய அறுவைசிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சை மையத்தின் தோரண வாயில்,
சிகிச்சை பெறும் பெற்றோர்கள், உறவினர்கள் என 250 பேர் ஒரே நேரத்தில் அமர்வதற்கான நவீன ஒலி - ஒளி அரங்கம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
அதேபோல், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம், அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை
என ரூ.35.46 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள கட்டடங்கள், ரூ.1 கோடி செலவில் பச்சிளம் குழந்தைகளுக் கான தைராய்டு
பரிசோதனைத் திட்டம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தொடங்கப்பட்டு 59 ஆண்டுகள் நிறை வடைந்ததை யடுத்து,
பொன்விழா ஆண்டு நினைவு அஞ்சல் அட்டையும் வெளியிடப் பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், `குழந்தைகள் தினத்தன்று மருத்துவ மனைக் கட்டடங் களைத் திறந்துள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது.
இந்த மருத்துவ மனையில் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவக் குழுவினரோடு வெளி நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மருத்துவ மனைகளை ஆய்வு செய்தார்.
அந்த மருத்துவ மனைகளில் இருக்கும் நவீன வசதிகள் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையிலும் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
பிறந்த குழந்தை களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யக் கூடிய ஓர் உயர்தர மருத்துவமனை தமிழகத்தில் இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
ஏழை எளிய தாய்மார்களின் குழந்தைகள் இதய சிகிச்சைகள் அனைத்தையும் முற்றிலும்
இலவசமாகப் பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறோம்" என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,
சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Thanks for Your Comments