கணவருடன் ஏற்பட்ட மோதலில் 95 வயது மாமியாரை அறையில் அடைத்து வைத்து மனைவி கொடுமைப் படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
டெல்லி பெண்கள் ஆணைய உதவி எண்ணுக்கு நேற்று முன்தினம் ஒருவர் போன் செய்தார்.
அதில், ‘‘95 வயதாகும் தாயை தனது மனைவி அறையில் அடைத்து வைத்துக் கொடுமை படுத்துகிறார்.
கடந்த 3 மாதங்களாக எனது தாயை பார்க்க விடாமல் தடுத்து வருகிறார்.
வீட்டுக்குள் செல்ல முடியாமல் தவிக்கிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் சண்டை நடந்ததால் சில காலம் பிரிந்து வாழ்ந்தோம்.
பிறகு என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் எனது தாய்க்கு உணவு, உடைகள் தராமல் கொடுமை படுத்தி வருகிறார்.
அவரை மீட்க வேண்டும்’’ என கூறினார். இதை யடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் உதவியுடன் பெண்கள் ஆணைய உறுப்பினர்கள் சென்றனர்.
ஆனால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க புகார் அளித்தவரின் மனைவி மறுத்து விட்டார்.
கணவரின் புகாரை ஏற்று நடவடிக்கை எடுத்தால் இனிமேல் அவரது தாயை அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்,
வீட்டில் இருந்து அவரை அழைத்துச் சென்று விடுவதாக கணவர் எழுதி தர வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
இதை ஏற்று கணவர் அவர் கூறியபடி எழுதிக் கொடுத்தார்.
இதன் பிறகு 95 வயதான அந்த மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
வயதான மூதாட்டியை கொடுமை படுத்திய மருமகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி பெண்கள் ஆணையம் தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments