உண்டியல் பணத்தை புயலால் பாதித்தவர்களுக்கு வழங்கிய அண்ணன் - தங்கை !

0
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. 
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அரசு மட்டுமன்றி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என 


பலரும் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, அரியலூரில் வழக்கறிஞராக உள்ள ஜெயக்குமார் என்பவரின் 9ம் வகுப்பு படிக்கும் மகன் நிறைநெஞ்சன், 

மற்றும் 4 ம் வகுப்பு படிக்கும் சாதனா ஆகிய இருவரும் தாங்கள் உண்டியலில் கடந்த ஒரு வருடமாக 


சேமித்து வைத்த சிறுசேமிப்பு தொகையான 7 ஆயிரத்து 500 ரூபாயை அரியலுார் மாவட்ட ஆட்சியர் விஜய லெட்சுமியிடம் வழங்கினர். 

சிறு சேமிப்பு பணத்தை கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்த சகோதர சகோதரிகளை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings