ராஜஸ்தானில் இருந்து ரயிலில் வந்த நாய்கறி எப்படி ஆட்டு கறியானது?

0
சமீபத்தில் பரவிய நாய்க்கறி வதந்தி குறித்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி யுள்ளனர்.
கடந்த 17ந் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை க்கு வந்த ரயிலில் 2000 கிலோ கறி பறிமுதல் செய்யப் பட்டது. 


இது நாய்க் கறியாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். அந்த இறைச்சிகள் அனைத்தும் புதைக்கப் பட்டன. 

இதனால் தமிழக மெங்கிலும், முக்கியமாக சென்னையில் இறைச்சி விற்பனை அடி வாங்கியது.

சமீபத்தில் வெளியான அறிக்கையில் பிடிபட்டது நாய் கறி இல்லை ஆட்டுக் கறிதான்,  ஆனால் அவை கெட்டுப்போன ஆட்டிறைச்சி என கூறப்பட்டது.

இதனிடையே இது குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. 

அந்த மனுவில் உணவுத்துறை அதிகாரிகள் இறைச்சி குறித்த ஆய்வறி க்கையை சமர்பிக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. 

மேலும் வெளி மாநிலங்களி லிருந்து கொண்டு வரப்படும் இறைச்சியை ஆய்வு செய்ய தனி ஆணையரை நியமிக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், முதலில் இதனை நாய்க்கறி என கூறிய 

அதிகாரிகள் பின்னர் ஏன் அதனை ஆட்டுக்கறி என கூறினார்கள்? அவசரம் அவசரமாக இறைச்சியை புதைக்க வேண்டிய அவசியம் என்ன? 


எந்த விதியின் கீழ் இறைச்சி அளிக்கப் பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

இது குறித்து வரும் 6ந் தேதிக்குள் விளக்க மளிக்க சென்னை மாநகராட்சி க்கு உத்தர விடப்பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings