கையில் இருக்கும் ரிமோட்டில் ஒரு பட்டனை அழுத்தினால் டிவி முன் உள்ள திரை விலகுகிறது. இன்னொரு பட்டனை அழுத்தினால் உங்களுக்கு விருப்பமான அலை வரிசை கிடைக்கிறது.
திரையில் காட்சிகள் ஓடத்தொடங்குகின்றன. அல்லது உங்கள் கையில் உள்ள அதிநவீன கைபேசியில் பட்டன்களை மாற்றி மாற்றி அழுத்தி நேரத்தைச் செலவிடலாம்.
பாப்கார்ன் பாக்கெட் கொண்டு வரச் சொல்லி ஒரு ரோபாட்டிற்கு நீங்கள் ஆணையிடலாம்.
படுக்கையில் படுத்தவாறே இருக்கும் (Like lying in bed) உங்களுக்கு ரிமோட் எப்போதும் உடனிருக்கும் துணைவன் அல்லது துணைவி.
நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உங்களுக்கு வேண்டிய பொழுது போக்கு நிகழ்ச்சிகளை உங்கள் முன்னாலே கொணர்ந்து
சமர்ப்பிக்கும் நவீன கருவிகள் உங்கள் கைவசம் இருக்கும் அலாவுதீனின் அற்புத விளக்குகள். உடற்பயிற்சியா.. அதற்கெல்லாம் ஏது நேரம்? என்றதொரு மனநிலை வளர்ந்து விட்டதால்
உலகெங்கும் கடந்த இருபது ஆண்டுகளில் உடற்பருமன் குறைபாடு வேகமாக வளர்ந்திருக்கிறது (Obesity has grown rapidly in the last twenty years).
1980-லிருந்து 2015 வரை 195 நாடுகளில் ஆய்வு நடந்த பிறகு தி நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை
உலகம் முழுவதிலும் குழந்தைகளும் பெரியவர்களுமாக 2.2 பில்லியன் ( 220 கோடி) மக்கள் உடற்பருமன் குறைபாடுடன் போராடிக் கொண்டி ருக்கின்றனர் எனத்தெரிவிக்கிறது.
உடற்பருமன் உள்ள 60 கோடி மக்களில் 7.94 கோடி பேர் அமெரிக்காவிலும் அதற்கடுத்து 5.73 கோடி பேர் சீனாவிலும் உள்ளனராம்.
ஆனால் குழந்தைகளை எடுத்துக் கொண்டால் (But if you take the kids), 1.53 கோடி உடற்பருமன் குழந்தைகளுடன் சீனா முதல் இடத்தைப் பிடிக்கிறது.
1.44 கோடி உடற்பருமன் குழந்தைகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது இந்தியா தான்.
உடல் நலனுக்கு உதவாத துரித உணவும் தேவைக்கதிகமாக உட்கொள்ளும் உணவும் உடற்பருமன் அதிகரிப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.
மரபணு அம்சங்களும் கூட சிலரது உடற் பருமனுக்குக் காரணமாக இருக்கின்றன (Genetic factors also contribute to obesity in some people.).
வரவர அதிகரித்துக் கொண்டே இருக்கும் (Will continue to increase). சோம்பேறித் தனமான வாழ்க்கை முறையும் கூட உடற்பருமன் கூடுவதற்குக் காரணமாக அமைகிறது ( Even a lazy lifestyle can lead to obesity ).
உடற் பயிற்சியினால் விளையும் நன்மைகள் பற்றி ஆய்வுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
ஆனால் நமது ஆழ்மனது சோம்பேறித்தனத்தின் மீது ஈர்க்கப்பட்டி ருக்கிறதோ? (But our subconscious mind is inspired by laziness)
ஆம் என்கிறது அண்மையில் நடத்தப்பட்டதோர் ஆராய்ச்சி. எழுந்திருப்பதா அல்லது படுத்திருப்பதா என்ற கேள்வி வரும் போது பிந்தையதே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது
என்கிறது பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாத்யூபோய்ஸ் காண்டியர் நடத்திய ஆய்வு.
சோம்பேறித் தனத்தைத் தவிர்ப்பதற்கு நமது மூளையை கடுமையான முறையில் மறு கட்டமைப்பு செய்தாலே இயலும் என மாத்யூவும் அவரது குழுவினரும் பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.
வேகமாகச் செய்யப்படும் உடற்பயிற்சிக் காட்சிகளையும் சோம்பேறித்தனமாக மனிதர்கள் இருக்கும் காட்சிகளையும்
அசைவூட்டப் படங்களாகக் (animation pictures) காண்பித்து பரிசோதனையில் பங்கேற்பவர்கள் அவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என ஆய்வு செய்யப்பட்டது.
செயலூக்கமுள்ள காட்சிகளின் பக்கம் அவர்கள் வேகமாக ஈர்க்கப் பட்டார்கள். ஆனால் அதற்கு மூளை கடினமாக உழைக்க வேண்டியிருந்தது (But the brain had to work hard for that.).
அதாவது, சுறுசுறுப்பான வாழ்வியல் முறைக்கு நாம் மாற வேண்டுமானால் (If we want to switch to an active lifestyle)
நமது மூளையின் வளங்களை மேலும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது (We need to involve more of our brain resources.).
இயல்பாகவே சோம்பேறித் தனமான நடைமுறைகளுக்கு மூளை ஈர்க்கப் பட்டுள்ளதால் அவற்றை மாற்றியமைக்க நாம் கடுமை யானதொரு மனப்போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.
வேற வேலை வெட்டியில்லாம இதுக்குப் போய் ஆய்வு செஞ்சாக்களாக்கும்? அதான் நமக்குத் தெரியுமே? என்கிறீர்களா..
அதுவும் சரி தான்.என்ன செய்யப் போகிறோம் என்பது தான் முக்கியமானது. சோபாவிலோ படுக்கையிலோ படுத்து சோம்பல் வாழ்க்கையே போதும் என இருக்கப் போகிறோமா?
அல்லது மூளை தரும் உள்ளுணர்வை வென்று சுறுசுறுப்பான வாழ்வை நோக்கிப் புறப்படப் போகிறோமா?
Thanks for Your Comments