சேலம் மாவட்டம் உப்புக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அப்பகுதியி லுள்ள
தனியார் கிரானைட் ஆலையில், கல் அறுவை செய்யும் தொழிலாளி யாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
மகள்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவு க்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரு க்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இதையறிந்த செல்வகுமார், மனைவி ஐஸ்வர்யாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஐஸ்வர்யா வீட்டில் இருந்த தோசை கல்லை எடுத்து செல்வ குமாரின் தலையில் அடித்துள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந் துள்ளார்.
இதை யடுத்து தன் கணவர் இறந்தது குறித்து ரவிக்கு, ஐஸ்வர்யா தகவல் அளித்துள்ளார்.
அதன் பேரில் வீட்டிற்கு வந்த ரவியும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து செல்வ குமாரின் உடலை
துணியால் சுற்றி, கல்லை கட்டி, அருகிலுள்ள கிணற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் செல்வகுமார் குறித்து ஐஸ்வர்யா விடம் விசாரித்த போது, பணி நிமித்தமாக வெளியூருக்கு சென்றுள்ள தாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசத் துவங்கி யுள்ளது.
இதனை யடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே ஐஸ்வர்யா, சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது, தன் கணவர் செல்வக் குமாரை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதை யடுத்து ஐஸ்வர்யா மற்றும் அவரது கள்ளக் காதலன் ரவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments