கஜா புயல் பாதித்த மாவட்டங் களில் முதல்வர் பழனிசாமி நாளை மறு நாள் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
கடந்த வாரம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் பழனிசாமி, வானிலை மோசமான தால்,
நாகை, திருவாரூர் மாவட்டங் களுக்குச் செல்லாமல் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், நாளை இரவு ரயில் மூலம் நாகை செல்லும் முதல்வர் பழனிசாமி, நாளை மறுநாள்
திருவாரூர், நாகை மாவட்டங் களுக்குச் சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.
முன்னதாக புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும்
ஹெலிகாப்டரில் சென்றதற்கு கடுமையான விமரிசனங்கள் முன் வைக்கப் பட்ட நிலையில் தற்போது முதல்வர் ரயிலில் பயணிக்கிறார்.
Thanks for Your Comments