கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசும் ஏனைய தனியார் தொண்டு நிறுவனங் களும் நிவாரண உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேதாரண்யத்தி லுள்ள தலைஞாயிறு ஒன்றியத்தை சேர்ந்த நடராஜன் மனைவி அமுதா.
அதே பகுதிய சேர்ந்த சுமதி செல்வராசு, ராஜகுமாரி, சரோஜா, மணி போன்றோர்
நேற்று முன் தினம் இரவில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற் காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நாகூர் நோக்கி சாலையில் விரைவாக சென்ற வாகனம் ஒன்று இந்த 5 பேர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
இதுகுறித்த அறிந்த போலீஸார் இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும் கல்லூரியில் பி.ஏ படித்து வந்த மாணவி அனுசுயா என்பவர் தன் வீடுக்கு அருகே உள்ள பகுதியில் நிவாரண உதவியை பெறுவதற்காக சென்றார்.
அப்போது மழையில் நனைந்த ஈரப்பதமான வீட்டுச் சுவர் ஒன்று அனுசுயா மீது விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி பலியானார்.
இதனை யடுத்து போலிஸார் அவரது பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
Thanks for Your Comments