சென்னை மயிலாப்பூரில் காவலரின் செல்போனை பறிக்க முயன்ற வர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர் ஆர்கே சாலையில் நேற்று நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில்
ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரிட மிருந்து, பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் செல்போனை பறிக்க முயற்சித் துள்ளனர்.
ஆனால் செல்போனை காவலர் இறுக்கமாக பிடித்திருந்த தால் அதை பறிக்க முடிய வில்லை.
இதை யடுத்து அந்த இருவரையும் காவலர்கள் துரத்தினர். இதில் ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த
பாஷித் இப்ராஹிம் என்பவர் காவலர் களால் மடக்கிப் பிடிக்கப் பட்டார்.
ஆனால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற கொடுங்கை யூரைச் சேர்ந்த பாலாஜி, ராயப்பேட்டை அருகே பிடிபட்டார்.
பின்னர் மேற்கொள்ளப் பட்ட விசாரணை யில், அவர்கள் இருவரும் மயிலாப்பூர்
பகுதியில் தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
அவர்கள் திருடிய செல்போன்கள் அனைத்தும் பர்மா பஜாரில் கடை வைத்துள்ள
அப்துல் ரகுமானிடம் விற்பனை செய்யப் பட்டதாக தெரிய வந்துள்ளது.
அப்துல் ரகுமான் அண்மை யில் மாம்பலம் காவல் துறையின ரால் திருட்டு போன் விற்பனை செய்த குற்றத்திற் காக கைது செய்யப் பட்டவர்.
இதைத் தொடர்ந்து, இவர்கள் சென்னையில் எங்கெல்லாம் செல்போன்கள் திருடியுள் ளார்கள்
என்பது குறித்து மயிலாப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்கே சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களையும் காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
Thanks for Your Comments