உலகின் முதல் இயந்திர செய்தி வாசிப்பாளர் !

0
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு இயந்திர செய்தி வாசிப்பாளரை சீன செய்தி நிறுவனம் அறிமுகப் படுத்தி யுள்ளது.
சீனாவின் வூஜென் நகரில் நடைபெற்று வரும் 5 ஆவது உலக இணைய மாநாட்டில் 

இந்த இயந்திர செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப் பட்டுள்ளார். 


உண்மையான செய்தி வாசிப்பாளரைப் போன்றே குரல் மற்றும் முகபாவங் களைக் கொண்ட 

இயந்திய செய்தி வாசிப்பாளரை சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா, 

சீன தேடு பொறி நிறுவனமான sogou.com உடன் இணைந்து வடிவமைத் துள்ளது.

இதன் மூலம் சமூக ஊடகத் தளங்களில் 24 மணி நேரமும் வேலை செய்ய முடியும் என சின்குவா தெரிவித்துள்ளது. 


மேலும், பேசும் ரோபோக்கள், ஓட்டுனர் இல்லா பேருந்து, முகபாவனை களை படம் பிடித்து 

சேமிக்கும் டிஜிட்டல் திரை ஆகியவையும் இந்த இணைய மாநாட்டில் காட்சிப் படுத்தப் பட்டன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings