சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாளர் ஒருவர் லிப்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னை காட்டாங் கொளத்தூரில் உள்ள பிரபல கல்லூரி யில் பல்லாயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலை யில் கல்லூரியில் மாணவி ஒருவர் லிப்டில் சென்றுள்ளார்.
அந்த லிப்டில் அதே கல்லூரியை சேர்ந்த பணியாளர் ஒருவரும் வந்துள்ளார். லிப்டில் இருவர் மட்டுமே இருந்த நிலையில், அந்த பணியாளர் திடீரென தனது துணியை அவிழ்த்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் அந்த மாணவியின் துணியையும் அவிழ்க்க முயன்றுள்ளான். இதனால் அதிர்ந்து போன மாணவி கூச்ச லிட்டுள்ளார். பயந்து போன அந்த பணியாளர் லிப்டி லிருந்து இறங்கி தப்பித்துள்ளான்.
இதனை யடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து சம்மந்தப்பட்ட
பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்ட த்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Thanks for Your Comments