அதிகாரிகளை ஆபாச வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த பெண்கள் !

0
ஓமலூரை அடுத்துள்ள கிராமத்திற்கு ஆய்வுக்காக சென்ற இரண்டு அதிகாரி களை பெண்கள் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிக்குந்தம், பள்ளிப்பட்டி, பொட்டனேரி, 

காளிப்பட்டி மற்றும் குட்டப்பட்டி வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத் திற்கு 800 கிலோ வாட் 

மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் உயரமான மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

விவசாய நிலங்களில் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வந்தனர். 

இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது. 

இந்நிலை யில் இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் 

இழப்பீடு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரின் வீட்டிற்குச் சென்ற போது 


அங்கு அனுமதி யின்றி செயல்பட்டு வரும் சாயப் பட்டறையைப் பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். 

பின்னர் அதிகாரிகள் அனுமதி யில்லாமல் சாயப்பட்டறை நடத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைகள் கூறினர். 

அப்போது அந்த வீட்டில் இருந்த மைதிலி, அம்சவேணி ஆகியோர் காவல்துறை 

உதவி ஆய்வாளர் உட்பட அனைத்து அரசு அதிகாரி களையும் ஆபாசமானப் பேசி திட்டியுள்ளார். 

ஒரு கட்டத்தில் எங்கள் நிலத்திற்கு அத்து மீறி யாரும் வரக்கூடாது என்று கல்லை எடுத்து 

அடிக்க வந்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தல் 

உட்பட நான்கு பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு பெண்களையும் கைது செய்தனர். 


மேலும் அவர்களை மேட்டூர் நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்திய பின் சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings