அந்தமானில் பழங்குடியினர் வசிக்கும் தீவுக்கு சென்ற அமெரிக்க இளைஞர், அவர்களால் கொல்லப் பட்டார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜான் ஆலன் ஜாவ். வயது 27.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தமானுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
பல் வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அவர், பழங்குடியினர் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல ஆசைப்பட்டார்.
இந்தப் பகுதிக்கு சுற்று லா பயணிகளை அழைத்துச் செல்ல மாட்டார்கள்.
பிற மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாத அந்த பழங்குடியினர், வெளி யாட்களை கண் டால் அம்புகளால் தாக்கத் தொடங்குவது வழக்கம் என்று கூறப்படு கிறது.
இந்நிலையில் ஜான் ஆலனை, அங்குள்ள 7 மீனவர்கள் அந்த தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற அவர் அங்கு சென்றதாக வும் கூறப்படுகிறது.
ஆனால், அவர் சுற்றுலா பயணி மட்டும்தான் என்று சிலர் தெரிவித் துள்ளனர்.
ஜான் ஆலனைக் கண்டதும் அங்குள்ள பழங்குடியினர் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அவரது உடல் இன்னும் கிடைக்க வில்லை. இது தொடர் பாக அவரை அந்த தீவுக்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதுபற்றி அங்குள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், ‘ஜான் ஆலன், ஏற்கனவே நான்கைந்து முறை இந்த தீவுக்கு மீனவர்கள் உதவியுடன் சென்றுள் ளார்.
இப்போது சென்றபோது அந்த பழங்குடியினர் அவரது கழுத்தை கயிறால் இறுக்கிக் கொன்றுள்ளனர்.
இதைக் கண்ட மீனவர்கள் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி திரும்பி வந்து விட்டனர்.
இது போலீசுக்கும் கடினமாக வழக்கு. அந்த பழங்குடியினரை கைது செய்யவும் முடியாது’ என்று கூறியுள்ளார்.
‘ஜான் ஆலன் கடந்த 14 ஆம் தேதி அந்த தீவுக்கு செல்ல முயன்றுள்ளார் என்றும் அப்போது செல்ல முடிய வில்லை என்பதால்
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்றுள்ளார்’ என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறி யுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் மீன் பிடித்து க்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் இந்த பழங்குடியி னரால் கொல்லப் பட்டது குறிப் பிடத் தக்கது.
அந்தப் பகுதியில் புகைப்படம் மற்றும் ஆவணப்படம் எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments