வங்கிகள் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது? அதற்கு என்ன செய்வது?

0
வங்கி அதிகாரிகள் இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி திட்டங்களை ஏமாற்றி விற்பதை நாம் பல முறை கேள்விப்பட்டு இருப்போம். 
பலர் வங்கி அதிகாரிகள் கூறும் ஆசை வார்த்தையினை நம்பி ஏமார்ந்தும் இருப்பார்கள். 

எனவே இது போன்ற ஒரு நிலை உங்களுக்கு வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.


இன்சூரன்ஸ்

உங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒரு நிறுவனம் ஏமாற்றி விற்று விட்டதா? 

கவலை வேண்டாம்? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக 15 முதல் 30 நாட்கள் ப்ரீ லாக் இன் வசதியினை அளிக்கின்றன. 

இந்த ப்ரீ லாக் இன் வசதி விண்ணப்பத்தினைப் பூர்த்திச் செய்த நாள் முதல் கிடையாது 

என்பது பாலிசிக்கான ஆவணத்தினைப் பெற்ற நாள் முதல் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

பங்கு சந்தையில் இணைக்கப் பட்டுள்ள காப்பீடு திட்டங்கள் அல்லது எண்டோவ்மெண்ட் திட்டங்கள் குறித்த 

தவறான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தால் ப்ரீ லாக் இன் காலத்தில் பணத்தினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்

பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளை ஏமாற்றி விற்று அதனை நீங்கள் வாங்கி இருந்தால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. 


அந்தச் சிக்கலின் படி ஒரு வருடத்திற்கு முன்பு ஃபண்டுக்கான பணத்தினைத் திரும்பப் எற்றால் 1 சதவீதத்தினைக் கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும்.

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட் திட்டத்தினை ஏமாற்றி விற்று இருந்தால் முதிர்வு காலம் முன்பே பணத்தினை வித்டிராவ் செய்யலாம். 

சில வங்கி நிறுவனங்கள் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் பிக்சட் டெபாசிட் பணத்தினைத் திரும்பப் பெறும் போது அபராத தொகையினைப் பெறுகின்றன. 

பெரும்பாலான வங்கிகள் நாள் கணக்கில் வட்டியைக் கணக்கிட்டு அளிக்கின்றன. 

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது சில நிறுவனங்கள் இடையில் வெளியேற விடுவதில்லை. 

சில தனியார் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் இடையில் வெளியேறும் போது 1 முதல் 3 சதவீதம் வரை அபராதம் விதிக்கப் படுகிறது.

தங்க கட்டிகள் அல்லது நாணயங்கள்

தங்க கட்டிகள் அல்லது நாணயங்களை ஏமார்ந்து வாங்கும் போது உடனே விற்பது சரியான முடிவு கிடையாது. 


சந்தை விலையினை விட 5 அல்லது 10 சதவீதம் குறைவான தொகையினைத் தான் நகை கடைக்காரர்கள் அளிப்பார்கள். 

இல்லை என்றால் அதனை உருக்கி ஆபரண நகைகளாக மற்றி பின்னர் விலை ஏறும் போது விற்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings