பெண்களை மாதவிடாய் காலங்களில் தனிமைப் படுத்தினால் சிறை - நேபாள அரசு !

0
பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப் படுத்துபவர் களுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை என்ற 
புதிய முன்னோடி சட்டத்தை நேபாள கம்யூனிச அரசு பாராளுமன்ற த்தில் இயற்றியுள்ளது.

நேபாளம் பாராளுமன்ற த்தில் கடந்த 2018 ஆகஸ்டில் , மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவது 


மற்றும் பண்டைய இந்து பழக்க வழக்கங்கல் போன்ற வற்றை குற்றம் எனவும் அந்த சமயங்களில் 

அவர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் நடத்துதல் சட்டத்திற்கு புறம்பானது செய்விக்கப் பட்டது.

நேபாளத்தில் இந்து மதத்தின்படி, பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது தீண்டத் தகாதவர்கள் என கருதி, 

தனி குடிசை அமைத்து தனிமைப் படுத்துகின்றனர். இந்த பழக்க வழக்கத்தை ‘சாபத்தி’ என்று வழங்கு கின்றனர்.

அந்நாட்டில், பெண்கள் மாதவிடாய் காலங்களின் போதோ, அல்லது குழந்தை பிறப்பிற்கு பின்போ, அவர்களை தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப் படுகின்றனர், 

கோயில் களுக்குள் நுழைவதும், உணவு, மத சின்னங்கள், கால்நடைகள், ஆண்களை தொடுவதும் தடை செய்யப் பட்டது.

2016ல் இரண்டு பெண்கள் சடங்குகள் மேற்கொள்ளும் போது உயிரிழந் துள்ளனர். 

கடந்த மாதம் ஒரு இளம் பெண் குடிசையில் தூங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்தார். 


இத்தகைய பல இறப்புகளை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்களும் முற்போக்காளர் களும் கண்டம் தெரிவித் துள்ளனர் .

பெண்களை இந்த சடங்குகளை பின்பற்ற தூண்டுவோர்க்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது 3,000 ரூபாய் அபராதம் 

அல்லது இரண்டும் வழங்கப்படும் என சட்டத்தின் சிறப்பம்சங் களாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. 

சட்ட மன்றம் கிருஷ்ணா பாக்தா போக்ரெல், மசோதா மூலம் தள்ளி வைத்த குழுவில் ஒரு பகுதியாக இருந்தார், 

புதிய சட்டம் இறுதியாக நல்ல முடிவை பெரும் இது போன்ற மூட நம்பிக்கை களை அழிக்கும் என நம்புவதாக கூறினார்.

இந்த வழக்கம் நேபாளத்தில் மட்டு மல்லாமல், இந்தியாவின் பல பகுதிகளி லும் இன்றளவிலும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. 


பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாத விடாயால் தங்களை புறக்கணிப்பது 

அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக உள்ளது என பல பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings