"என் கல்யாணத்து க்கு என்ன வேணுமோ அதை நீங்களே உங்க இஷ்டப்படி வாங்கிட்டு வாங்க" என்று சொன்ன ரம்யா தான் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டார்.
எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சின்னய்யா. இவரது மகள்தான் 19 வயது ரம்யா. 8-வது வரைதான் படித்துள்ளார் ரம்யா.
இருந்தாலும் மகளுக்கு கல்யாணத்தை செய்து வெச்சிடலாம் என்று சின்னய்யா முடிவு செய்தார்.
அதற்காக ரம்யாவின் தாய் மாமனை பேசி முடித்தார்கள். திருமணத்துக்கு எந்தவித எதிர்ப்பும் ரம்யா சொல்லவே இல்லை,.
துணி எடுக்க போறோம்
பெற்றோர் முடிவு செய்ய வருகிற திங்கட்கிழமை தான் கல்யாணம் என முடிவானது.
அதனால் நேற்று சாயங்காலம் கல்யாணத்துக்கு துணி எடுக்க வீட்டில் எல்லோரும் கிளம்பினார்கள்.
வண்ணாரப் பேட்டை ஜி-ஏ ரோட்டில்தான் துணி மணிகளை எடுக்க வேண்டும் என்று சொல்லி கிளம்பினார்கள். ரம்யாவையும் கிளம்ப சொன்னார்கள்.
சிரித்து வழியனுப்பிய ரம்யா
ஆனால் ரம்யா, "நான் வரவில்லை.. நீங்களே போய்ட்டு வந்துடுங்க" என்றார்.
அதற்கு சின்னய்யா, "நீதானேம்மா கல்யாண பொண்ணு, உனக்கு வேணும்றதை நீதான் எடுத்துக்கணும்" என்றார்.
ரம்யாவோ சிரித்தபடியே "எனக்கு என்ன வேணும்னு நீங்களே முடிவு செலக்ட் பண்ணி வாங்கிட்டு வாங்க" என்றார்.
கதவை உடைத்த சின்னய்யா
"சரிம்மா.. பத்திரமா இரு.. போய்ட் வந்துடறோம்" என்று சொல்லி ரம்யாவின் அந்த சிரிப்பை பார்த்த படியே எல்லோரும் கிளம்பி போனார்கள்.
கொஞ்ச நேரத்தில் சின்னய்யா மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். கதவு உள்பக்கமாக தாளிடப் பட்டிருந்ததால் கதவை தட்டினார்.
ரம்யா திறக்கவே இல்லை.. நீண்ட நேரம் தட்டி பார்த்த சின்னய்யா, கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்.
கட்டி பிடித்து கதறினர்
அங்கே ரம்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார். கடைக்கு போன உறவினர் களுக்கு தகவல் கொடுக்க,
அவர்களும் விரைந்து வந்து ரம்யாவை கட்டிப் பிடித்து கொண்டு அழுதார்கள்.
விஷயம் தெரிந்து எண்ணூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
2 நாளில் கல்யாணத்தை வைத்து கொண்டு ரம்யா தற்கொலை செய்ய என்ன காரணம் என தெரியாமல் பெற்றவர்கள் துடித்து அழுதபடியே உள்ளனர்.
கல்யாண பெண் ரம்யாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை போலீசார் அறிய முற்பட்டுள்ளனர்.
Thanks for Your Comments