சென்னையை அடுத்துள்ள ஆவடியில் முதியோர் செவ்வாய் கிழமை படுகொலை செய்யப் பட்டனர்.
மேலும் அவ்வீட்டின் காவலாளியும் காண வில்லை. ஜெகதீசன் (68), விஷாலினி (61) தம்பதியினர் அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
இவர்கள் இருவரும் சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதியான ஆவடியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய் கிழமை காலை 8 மணியளவில் அந்த வீட்டில் பணி செய்து வந்த
கார்பென்டர் சந்திரசேகர் என்பவர் வழக்கம் போல் அங்கு சென்ற போது வீடு உள்புறம் பூட்டியிருந் துள்ளது.
இதை யடுத்து அவர் வீட்டின் கதவை தட்டி யுள்ளார். பின்னர் சந்தேக மடைந்த சந்திரசேகர்
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ரத்தக் கறையை கண்டுள்ளார்.
எனவே அவர் ஜெகதீசன் சகோதரர் கோபிநாத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த கோபிநாத் பெட்ரூமில் முதியவர்கள் இருவரும் படுகொலை செய்யப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார்.
அங்கு இரும்புக் கம்பியையும் கண்டுள்ளார். உடனடியாக போலீஸா ருக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் 15 நாட்களுக்கு முன்பு காவலாளி யாகப் பணியில் சேர்ந்தவர் மாயமானது தெரிய வந்தது.
மேலும் வீட்டிலிருந்த நகைகளும் கொள்ளைய டிக்கப்பட்டி ருந்தன.
இவ்வழக்கு தொடர்பாக 5 சிறப்புப் படை நியமிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப் பட்டுள்ள தாக போலீஸார் தெரிவித்தனர்.
Thanks for Your Comments