மேம்பாலத்தின் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள் !

0
மார்த்தாண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம் பாலத்தின் மீது பொதுமக்கள் நடக்கும் போது 


மிதப்பது போன்ற புதுமையான அனுபவம் ஏற்பட்டுள்ள தாக தெரிவித்தனர்.

நாகர் கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 

மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள் அமைக்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார். 

அதில் ரூ.142 கோடியில் பணி நடந்து வந்த மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிறைவுறும் தருவாயை எட்டி விட்டது. 

இதை தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலம் பொது மக்கள் பார்வைக்காக இன்று மாலை 4 மணிமுதல் 7 மணிவரை திறக்கப்பட்டது. 

இதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பொது மக்களுடன் கலந்து கொண்டார். 

இரவு வரை லட்சத்தை தொடும் அளவிற்கு மக்கள் மேம்பாலத்தை பார்வை யிட்டனர். 

மேம்பாலத்தில் நடந்து செல்லும் போது சிறு அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 

அதிலும் குழித்துறை தர்மசாஸ்தா கோயில் அருகில் செல்லும் போது பாலத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 

இதனால் "பாலம் ஆடுகிறது" என பொதுமக்கள் கூறினர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை டிவிஷனல் இன்ஜினியர் தனசேகர் கூறுகையில், 


"மேம்பாலங்களை தாங்கும் பகுதியில் ஸ்பிரிங் போன்ற அமைப்பு ஏற்படுத்தப் படிருக்கும். 

அப்படி அமைத்தால் தான் வாகனங்கள் செல்லும்போது பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. 

எனவே தான் நடந்துசெல்லும் மக்களுக்கு மிதப்பது போன்றும், பாலம் ஆடுவது போன்றும் உணவு ஏற்படும்" என்றார். 

"வகனங்கள் செல்லுவதற்கு மட்டுமே மேம்பாலம். மேம்பாலங்களில் பொதுவாக மக்கள் நடந்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள். 

ஜாக்கப்சர் போன்ற வடிவமைப்பு உள்ளதால் இந்த உணர்வு ஏற்படுவ தாகவும் மேம்பாலத்தை வடிவமைத்த கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings