கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடு கொண்டப் பள்ளியில், சாதி மீறி திருமணம் செய்த
நந்தீஸ் – சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப் பட்டனர்.
அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வீசப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
நந்தீஸை 20க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டி யுள்ளது.
அப்படியும் அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. அவர்களை யாரும் அடையாளம்
கண்டு விடக்கூடாது என்பதற்காக இருவரின் முகங்களையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர்.
சுவாதியின் தலை முடியை அரிவாளாலேயே மழித்துள்ளனர்.
மேலும், கருவைச் சிதைக்கும் நோக்கில் அவரின் அடி வயிற்றுப் பகுதியையும் கல்லால் தாக்கி சிதைத் துள்ளனர்.
அதன் பிறகே இருவரின் சடலங்களையும் காவிரி ஆற்றில் வீசிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி யுள்ளனர்.
கைதான பெண்ணின் தந்தை சீனிவாசன் பொலிசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்ப தாவது:-
எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் நான் அவமானம் அடைந்தேன். இதனால் நான் அவர்களை கொலை செய்ய திட்ட மிட்டேன்.
கடந்த 10-ந் தேதி ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் வருவதாக அறிந்தேன்.
அவரை பார்ப்பதற்காக எப்படியும் நந்தீஸ், சுவாதி வருவார்கள் என அறிந்து கொண்டேன்.
இதனால் அங்கு வந்த அவர்களை எனது உறவினர்கள் மூலமாக நைசாக பேசி அழைத்து சென்றேன்.
பின்னர் ஆத்திரத்தில் அவர்களை அடித்து கொலை செய்தோம் என கூறியுள்ளார்,
கொலையுண்ட நந்தீஸ் தான் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும், தன்னிடம் இருந்த செல்போன்
மூலமாக ஓசூரில் உள்ள முக்கிய நபர் ஒருவருக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
அதில் கிட்நாப், நைஸ் ரோடு என்று குறிப்பிட் டுள்ளார். 11-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் இந்த தகவல் அந்த நபருக்கு சென்றுள்ளது.
காலை 6 மணி அளவில் அந்த தகவலை பார்த்த அந்த நபர் நந்தீசின் உறவினர் களுக்கு தெரிவித்தார்.
இதன் பிறகே நந்தீஸ் – சுவாதி தம்பதியை தேடும் பணியை உறவினர்கள் தொடங்கினார்கள்.
தற்போது இந்த இரட்டை கொலையில் கர்நாடக பொலிசார் வழக்குப்பதிவு மட்டும் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
Thanks for Your Comments