குண்டுகளுக்கிடையே உயிரைப் பணயம் வைக்கும் ஈராக் சிறுவர்கள் !

0
இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான போர் ஓரளவு முடிவடைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வருகிறார்கள்.
குண்டுகளுக்கிடையே உயிரைப் பணயம் வைக்கும் ஈராக் சிறுவர்கள் !
இந்த நிலையில் அங்கு போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மொசூல் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான வறுமை நிலவுகிறது.

உணவு மற்றும் அன்றாடத் தேவை களுக்காக சிறுவர்கள் மிகுந்த ஆபத்தான பணிகளில் ஈடுபடு கின்றனர்.

போர் காலங்களில் குண்டுகளால் தரை மட்டமான கட்டிடங்களில் புதைந்திரு க்கும் உலோகங் களைச் சேகரித்து அதனைக் கடைகளில் விற்று தங்களின் ஒரு நாளைக் கழித்து வருகிறார்கள் இச்சிறுவர்கள்.

இது குறித்த செய்தித் தொகுப்பை அல் ஜசிரா செய்து நிறுவனம் வெளியிட் டுள்ளது.

அதில் முகமது யூனிஸ் முஸ்தபா என்ற சிறுவன் பேசும் போது, நான் சாலைகளில் குண்டுகளால் சரிந்த கட்டிடங்களுக் கிடையே உள்ள உலோகங் களைச் சேகரிக்கிறேன். 

அதுவே நான் ஒரு நாளைக் கடப்பதற் கான பணத்தை தருகிறது. நான் எங்கும் திருடவில்லை'' என்றார்.
இந்த நிலையில் அந்தச் சிறுவர்களிடம் உலோகங் களைப் பெற்று பணம் அளிக்கும் கடைக்காரர் ஒருவர் கூறும் போது, ''அந்தச் சிறுவர்களு க்கு உதவுவதற்கு யாரும் இல்லை. 

அதனால் அவர்களது குடும்பத்தைக் காப்பாற்று வதற்காக உலோகங் களைச் சேகரித்துத் தருகின்றனர். பல சிறுவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பையே கைவிட்டு விட்டனர். 

ஒரு நாளைக்கு சுமார் 50 கிலோ உலோகங் களை அவர்கள் சேகரிக்கின்றனர்'' என்றார். குண்டு வீசப்பட்ட இடங்களில் வெடிக்காத குண்டுகள் இருக்கலாம். 

அது அந்த சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித் துள்ளனர்.

முகமது மட்டுமல்ல அவர் வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த உலோகங் களைச் சேகரிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இராக்கின் மொசூல் நகரை 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். 

அந்த நகரை மீட்க இராக் அரசுப் படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளுக் காக கடுமை யான போரில் ஈடுபட்டனர்.

இதில் ஐஎஸ் கட்டுப் பாட்டிலிருந்த பல பகுதிகளை இராக் அரசு கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது.  ...இந்து
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings