வர்தாவை விட பயங்கரமாக தாக்க வரும் கஜா புயல்?

புயல் என்றதும் நம் நினைவுக்கு வருவது சென்னையை தாக்கிய வர்தா புயல் தான். 


வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறியுள்ளது. 

தற்போது வரவுள்ள புயலுக்கு கஜா என பெயரிடப் பட்டுள்ளது. 

ஏற்கனவே, வானிலை அமைப்புகள் வங்கக் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி 

நகரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது உறுதி செய்யப் பட்டுள்ளது. 

வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரயுள்ளதாம். 

அதாவது, 13 அல்லது 14 ஆம் தேதிகளில் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும். 

12 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல் சென்னையின் தென்கிழக்கே 990 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 


மேலும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

வட தமிழகம் - ஆந்திரா இடையே இந்த புயல் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.
Tags:
Privacy and cookie settings