மதுரை திருப்பரங் குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குச் சென்றால் பல பிளாஸ்டிக் சாலைகளைப் பார்க்க முடியும்.
அக்கல்லூரி யிலிருந்து ஓய்வு பெற்ற வேதியியல் பேராசியர் ஆர்.வாசு தேவனின் கண்டு பிடிப்பின் விளைவாகப் போடப்பட்ட சாலைகளே இவை.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் ஆராய்ச்சி யில் கடந்த இருபது ஆண்டுகளாக அவர் தன் உழைப்பைச் செலுத்தி வருகிறார்.
18 ஆண்டு களுக்கு முன் தாருடன் பிளாஸ்டிக்கி னால் பூசப்பட்ட துகள்களைக் கலந்து சாலைகள் போட அவர் தொடங்கினார்.
2000-ம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள ஜம்புலிங்கம் தெருவில் அவரது முதல் பிளாஸ்டிக் தார் சாலை போடப்பட்டது.
அடுத்து கோவில்பட்டி லெனின் தெருவில் அந்தப் பரிசோதனை நடந்தது. இன்றும் அந்த இரு சாலைகளும் வலுவாகவே உள்ளன என்கிறார் வாசுதேவன்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தமிழக மாவட்டங்களில் 17.000 கி.மீ. சாலை களைப் போட்டிருக் கிறது.
புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்கம், கோவா, இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் பிளாஸ்டிக் சாலை தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொண்டிருக் கின்றன.
2015-ம் ஆண்டில் மத்திய அரசு கொணர்ந்த ஒரு சட்டமும் இதற்கு ஊக்க மளிக்கிறது. 2006-ம் ஆண்டில் தியாகராஜர் கல்லூரி இந்தத் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது.
இந்தியாவின் பல மாநிலங் களிலும் இதுவரை 1,00,000 கி.மீ. பிளாஸ்டிக் -தார் சாலைகள் போடப் பட்டுள்ளன.
பிளாஸ்டிக் சாலைகள் போட விரும்பும் யாருக்கும் அந்தத் தொழில் நுட்பத்தையும் வழி காட்டுதலை யும் இலவசமாகத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிறார் இந்தியாவின் பிளாஸ்டிக் மனிதர் என அழைக்கப்படும் பத்மஸ்ரீ வாசுதேவன்.
பிளாஸ்டிக் பொருட்களு க்கு தடை கொணர்வது சுற்றுச் சூழல் நோக்கில் வரவேற்கப் படுகிறது.
ஆனால் வாசுதேவன் இக்கருத்தி லிருந்து மாறுபடுகிறார். “சுற்றுச் சூழல் பராமரிப்புக்கு பிளாஸ்டிக்கைத் தடை செய்வது தீர்வு அல்ல.
மாறாக, பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து திறம்படப் பயன்ப டுத்துவது தான் தீர்வு. காரணம், பிளாஸ்டிக் ஒரு முக்கிய மான கண்டுபிடிப்பு.
பல்வேறு விதங்களில் அது நமக்குப் பயன்பட்டு வருகிறது. நம்முடைய வாழ்க்கையி லிருந்து அதை அகற்றுவது நடைமுறை சாத்திய மற்றது” என்கிறார் அவர்.
பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைக் கூடைகளில் வீசி எறிவதற்குப் பதிலாக, பழைய பேப்பர்களை எடைக்குப் போடுவதைப் போல
மறுசுழற்சி செய்வதற் காக அவற்றைக் கடைகளில் கொண்டு போய் விற்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக் கிறார்.
குப்பைகளி லிருந்து பினாஸ்டிக் பொருட்களைப் பிரித்தெடுப்பது அனைத்து தனியார் மற்றும் பொது இடங்களிலும் நடைபெற வேண்டும்.
அவற்றை சாலை போடும் நிறுவனங்களில் கொண்டு போய் விற்பதற்கு சுய உதவிக்
குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனை. பேரா. வாசுதேவனுட னும் பிற நிபுணர்களுடனும் அரசு கலந்தோசித்து ஒரு சரியான தீர்வைக் கண்டுபிடிப்பது சரியாக இருக்கும்.
“நாட்டிலுள்ள 46 லட்சம் கி.மீ. நீளம் உள்ள அனைத்து சாலைகளு க்கும் பிளாஸ்டிக் -தார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனில் 100 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்படும்.
ஆங்காங்கே வீசி எறியப்படும் கழிவுகளைச் சேகரித்தா லும் 30 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே தேறும்.
சரியான முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிக்காமல் நீர் நிலைகளை யும் கால்வாய் களையும் அவை அடைத்துக் கொள்ளுமாறு விடுவது அரசு, நிறுவனங்கள், மக்கள் ஆகிய நம் எல்லோருடைய தவறு.
அதிக அளவில் நமக்குப் பயன்படக் கூடிய பிளாஸ்டிக் போன்ற அருமை யானதொரு பொருள் மனிதத் தவறின் காரணமாக கெட்ட பெயர் வாங்கி யிருக்கிறது” என்று மேலும் விளக்கம் அளிக்கிறார் வாசுதேவன்.
கல் பாளத்திற்கு பிளாஸ்டிக் பூச்சு கொடுத்து பிளாஸ்டோன் என்ற பொருளை அவர் தயாரித் திருக்கிறார்.
தரைத் தளம் போட, காம்பவுண்ட் சுவர் எழுப்ப, கழிப்பறைகள் கட்ட எனப் பல்வேறு விதங்களில் அதைப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கிறார் பேரா. வாசுதேவன்.
Thanks for Your Comments