சென்னையில் மூட்டை மூட்டையாக பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் !

0
சென்னை புழல் அருகே 35 மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 


துண்டு துண்டாக வெட்டப்பட்டு 35 மூட்டைகளில் புழல் ஏரிக்கு அருகே வீசப்பட் டுள்ளது பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். 

இதை யடுத்து நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என

அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத் திற்கு வழந்தது.

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளவதற்கு காலக்கெடு கொடுக்கப் பட்டதுடன் 

பழைய நோட்டுக் களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப் பாடுகளும் விதிக்கப் பட்டது. 


இதை யடுத்து வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த வர்களால் 

பணத்தை மாற்ற முடியாமல் ரூபாய் நோட்டுக் களை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசினர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே இன்று மூட்டை மூட்டை யாக

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கிடந்ததை பார்த்தவர்கள் போலீஸாரு க்கு தகவல் அளித்தனர். 

இதை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போலீஸார், 35 மூட்டை களையும் பறிமுதல் செய்து பிரித்து பார்த்த போது, 

மூட்டையில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப் பட்டிருந்தன.


இது அந்த பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழைய பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பது 

கணக்கீடு மற்றும் அந்த நோட்டுக் களை வெட்டி வீசியவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings