இன்று பலர் வாட்ஸப்பில் இந்த டைரி மில்க் பற்றிய சர்ச்சைக்குரிய ஒரு சில படங்கள் வெளியாகி எல்லோர் கவனத்தையும் டைரி மில்கில் மீது திருப்பி உள்ளது.
பல கடைகளில் சிறிது காலத்திற்கு டைரி மில்க் சாக்லேட் விற்க வேண்டாம் என்கிற முடிவும் எடுத்துள்ளனர்.
cadbury டைரி மில்கில் எச்.ஐ.வி வைரஸ் கலந்துள்ளதா..? இனி இதை சாப்பிடலாமா..? கூடாதா..?
உண்மையில் டைரி மில்க்கில் எச்.ஐ.வி வைரஸ் கலந்துள்ளதா..? அல்லது இதுவும் போலியான வாட்சப் செய்தியா..? என்கிற குழப்பம் உங்கள் அனைவரிடமும் இருக்கும்.
இதற்கான விடையை அறிந்து கொள்வதற்கே இந்த பதிவு. வாங்க, உண்மை என்னென்னு தெரிஞ்சிக்க லாம்.
பிரபலமான நிறுவனம்..!
காதலர்கள் என்றாலே டைரி மில்க் தான் ஞாபகத்துக்கு வர தொடங்கும். காதலை சொல்லும் போதும், பிரிவை தரும் போதும் அந்த இடத்தில் இந்த சாக்லேட் முக்கிய இடம் பெறும்.
1824 ஆம் ஆண்டே தொடங்கபட்டு, மிகவும் பிரபலமான நிறுவனமாக உலகையே இது வலம் வருகிறது.
வாட்சப் செய்தி என்ன..?
வாட்சப்பில் பல வகையான போலி செய்திகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.
இந்த வகையில் ஆதாரத்துடனான ஒரு புகை படம் வெளியாகினால் யாராக இருந்தாலும் பயம் வரத்தான் செய்யும்.
அதுவும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிட கூடிய இந்த டைரி மில்க் சாக்லேட்டில் எச்.ஐ.வி வைரஸ் என்றால் அவ்வளவு தான்..!
செய்தி என்ன..?
வாட்சப்பில் பரவிய செய்து என்ன வென்றால், "டைரி மில்க் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தில்
வேலை செய்யும் ஊழியர் ஒருவர் எச்.ஐ.வி வைரஸை, சாக்லேட் செய்யும் கலவையுடன் கலந்து விட்ட தாகவும்,
அதை சாப்பிட்ட குழந்தைகள் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக வும் BBC-யில் செய்தி வெளி வந்துள்ள தாக" வாட்ஸப்பில் வந்தது.
யார் ஏவியது..?
பல நாடுகளில் இது போன்ற வைரஸ் தாக்குதல் நடந்த வரலாறு களும் இங்கு உள்ளது. அதே வாட்சப் செய்தியில் மேலும், ஒரு புகைப்படம் இடம் பெற்றது.
அதாவது, அந்த வைரஸை ஏவியதாக ஆப்பிரிக்கா வின் எதிரி நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்பு கொள்வது போன்ற ஒரு புகைப்படமும் அதில் இடம் பெற்றது.
காரணம் என்ன..?
அதில் அந்த விஞ்ஞானிகள் "கருப்பினத் தவரை அழிக்கவே இந்த எச்.ஐ.வி வைரஸ் தாக்குதல்"
என்ற முக்கிய தகவலை குறிப்பாக கூறியிருந்த தாக புகைப்படம் இடம் பெற்றது.
அத்துடன் ஒரு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த குழந்தை உடல் முழுவதும் ஏதோ வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டது போன்ற புகைப்படமும் இடம் பெற்றது.
உண்மையில் எச்.ஐ.வி வைரஸ் தாக்குதலா..?
உண்மையில் வாட்சப்பில் வந்த தகவலின் படி இது கருப்பினத்த வரை அழிக்க ஒரு சில நாடுகள் செய்த சதியா...?
என்ற பல கேள்விகளோடு இதனை பல கோணங்களில் ஆராய்ந்த போது உண்மை புலப்பட்டது.
அதற்கான ஆதாரங் களையும், நிருபனங் களையும் கேட்பரி நிறுவனம் மற்றும் சில தொழிற்நுட்ப விஞ்ஞானிகளும் வெளி யிட்டனர்.
எச்.ஐ.வி..!
உண்மையில் இந்த எச்.ஐ.வி வைரஸ் இது போன்ற உணவின் மூலம் பரவுமா என்ற கேள்வியை முதலில் அறிவோம்.
எச்.ஐ.வி என்பது எச்.ஐ.வி வைரஸ் பாதிக்கப் பட்டவரின் ரத்தத்தின் மூலம் பிறருக்கு பரவ கூடிய வைரசாகும்.
குறிப்பாக தாய்ப்பால், விந்தணு, பிறப்புறுப்பின் மூலம் ஆகிய வற்றால் இது பரவ முடியும் .
இப்படி பரவாது..!
ஆனால், எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவரோடு கை குலுக்கினாலே, முத்தம் கொடுத்தாலோ, கட்டி பிடித்தாலோ, உணவை பரிமாறினாலோ இந்த வைரஸ் பரவாது.
இது தான், அறிவியல் பூர்வமாக நிரூபணமான எச்.ஐ.வி வைரஸ் பற்றிய தகவலாகும். எனவே இவற்றின் மூலம் எச்.ஐ.வி வைரஸ் பரவாது.
யாருடையிய தாக்குதலும் இல்லை..!
இந்த செய்தியில் வந்தது போன்று எச்.ஐ.வி வைரஸை கொண்டு எந்த நாட்டு விஞ்ஞானி களும் தாக்குதல் நடத்த வில்லை என்பது உண்மை யானது.
ஆனால், அந்த சாக்லேட்டின் மீது இருந்த புழுக்கள் என்ன..? என்பது இப்போது உங்களின் கேள்வி தானே.."
பெப்சி சர்ச்சை..!
இந்த வாட்சப்பில் வந்த தகவலை போன்றே ஏற்கனவே பெப்சி பாட்டிலில் இதே போன்று எச்.ஐ.வி வைரஸ் செலுத்தப் பட்டுள்ளது என வதந்தி செய்தி பரவியது.
இதே புகைப் படத்தில் உள்ள மனிதரின் புகைப்படம் தான் அப்போதும் பலரிடம் பரவியது. ஆனால், உண்மை வேறு.
யார் அந்த மனிதர்..?
இன்று வாட்ஸப்பில் பரவலாக பேசப்படும் அந்த மனிதர், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதி என்றும்,
இவர் டைரி மில்க் சாக்லேட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் இல்லை என்பதும் உறுதியானது.
இவர் 2014-ல் நைஜீரியா நாட்டில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாக,
உண்மை செய்தியை பல தொழிற்நுட்ப விஞ்ஞானி களும், காவல் துறையினரும் கண்டறிந்து வெளியிட் டுள்ளனர்.
அப்போ அந்த புழுக்கள்..?
உண்மையில் எச்.ஐ.வி வைரஸ் என்பது கண்ணிற்கு தெரியாத ஒரு வைரஸ் ஆகும்.
ஆனால், இந்த படத்தில் சாக்கோலேட்டின் மீது ஒரு சில புழுக்கள் இருப்பது போன்று வந்துள்ளது. அதாவது எச்.ஐ.வி வைரஸ் புழு வடிவத்தில் இருக்காது என்பது புரிந்து விட்டது.
எதனால் புழுக்கள்...?
இந்த புகை படத்தில் காட்டிய புழுக்கள் உண்மை தான். ஆனால், அவை எச்.ஐ.வி வைரஸ் கிடையாது.
அதாவது, இந்த சாக்லேட் கவர், கடைகளில் விற்க ஏற்றுமதி செய்யும் போது பிரிந்து விட்டதால், இந்த புழுக்கள் வந்ததாக உறுதி செய்யப் பட்டது.
புழுக்கள் வந்ததற்கு உண்மை காரணம் கவர் பிரிந்ததாலே தான்.
வதந்தி..!
பல வகையான உண்மை தகவல்களை தொழிற் நுட்பத்தின் உதவியோடு கண்டறிந்த தால், டைரி மில்க் சாக்லேட் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது.
எச்.ஐ.வி வைரஸ் டைரி மில்க் சாக்லேட்டில் இல்லை என்பதும், இதன் மூலம் பரவவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
எனவே, வாட்சப்பில் வந்த இந்த செய்தி போலியானது என்பதே உண்மை.
ஆதலால், இந்த போலி செய்தியை இனி பிறரிடம் பகிர்ந்து பயத்தை உண்டாக்க வேண்டாம் நண்பர்களே.
புது முயற்சி..!
Thanks for Your Comments