கஜா புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உதவ பள்ளிக் குழந்தைகள்
தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத் தியது.
கஜா புயல் நிவாரணமாக சேமிப்பு தொகையை வழங்கிய மாணவர்கள்
கடந்த வாரம் வீசிய கஜா புயலில் புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போயின.
இம்மாவட்ட த்தினைச் சேர்ந்த பல ஆயிரக்கணக் கான மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தை யும் இழந்து வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உதவ மாநிலம் முழுவதிலு மிருந்து பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டம் முழுவதிலு மிருந்து பெறப்பட்ட
நிவாரண உதவிகள் இம்மாவட்டங் களுக்கு 4 கட்டங்களாக அனுப்பப் பட்டுள்ளது.
இதுவரை சுமார் 25 லட்சம் பெறுமானம் உள்ள உதவிகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தி னால் புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாத புரத்தை அடுத்துள்ள பேராவூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
பயிலும் மாணவ மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையினை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
இப்பள்ளியில் பயிலும் 69 மாணவ மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.2,900-ஐ பள்ளித்
தலைமை ஆசிரியர் காளீஸ்வரி மூலம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வழங்கினர்.
முன்னதாக விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த மாவட்ட ஆட்சியரிடம்
மாணவர்கள் நிவாரண நிதி அளிக்க வந்திருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
உடனடியாக மாணவர்களை அழைத்து வரச் செய்து அங்கு கூடியிருந்த விவசாயி களுக்கு
முன்பாக வைத்து மாணவர்கள் அளித்த நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டார்.
மாணவர்களின் இந்த உதவும் நோக்கத்தை மாவட்ட ஆட்சியர் பாராட்டிய துடன், அங்கு இருந்த விவசாயிகள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Thanks for Your Comments