கர்நாடகாவில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 16 பேர் இறப்புக்கு காரணமாக வழக்கில் கைது செய்யப்ப ட்டுள்ள அம்பிகா, பொலிஸ் மீது குற்றம் சுமத்தி யுள்ளார்.
கர்நாடகாவின் சாம்ராஜ் மாவட்டத்தின் சுலவாடி கிராமத்தில் கிச்குத்தி மாரம்மா என்ற கோவில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு பக்தர்களுக்கு வழங்கப்பட்ட கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 16 பேர் பலியானார்கள்,
90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கில் கோவில் நிர்வாகத்தை கைப்பற்றும் நோக்கில் இது நடந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மடாதிபதி மகாதேவசாமி, கோவில் மானேஜர் மாதேஷ் அவரது மனைவி அம்பிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விஷம் கலந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
இந்நிலையில் நேற்று அம்பிகாவை வீட்டுக்கு அழைத்து சென்று பொலிசார் விசாரித்த போது, விஷ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இதை பார்த்ததும் சத்தமிட்ட அம்பிகா, பொலிசாரே தன் வீட்டில் விஷ பாட்டிலை வைத்து விட்டு தன் மீது குற்றம் சுமத்துவதாக கூறினார்.
மேலும் தான் பிரசாதத்தில் விஷம் கலக்கவில்லை என்றும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் அம்பிகாவை கைது செய்த உடனேயே வீட்டை பூட்டி விட்டதால் தாங்கள் எப்படி விஷபாட்டிலை வைக்க முடியும் என பொலிசார் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
Thanks for Your Comments