தமிழத்தில் 20 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே 19 தொகுதிகள் இன்னும் காலியாகவே உள்ளன.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி, உடல்நலக் குறைவால், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மரண மடைந்தார். இதை யடுத்து அவர் வகித்து வந்த திருவாரூர் தொகுதி காலியாகி யுள்ளது.
இதற்கு ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
அதேநேரம், அதிமுகவி லிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ க்களால் காலியாக உள்ள 18 தொகுதி களுக்கும்,
அதிமுக சட்டசபை உறுப்பினர் ஏ.கே. போஸ் மறைவால் காலியாக உள்ள திருப்பரங் குன்றம் சட்டசபை தொகுதி க்கும் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப் படவில்லை.
திருப்பரங் குன்றம்
2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருப்பரங் குன்றத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் முடிவு வெளியாகும்
முன்பே மே 25ம் தேதி சீனிவேலு உடல்நலக் குறைவால் இறந்தார். இந்த நிலையில், திருப்பரங் குன்றத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டது.
ஆனால், அப்போது கட்சி பொதுச் செயலாளராக இருந்த, ஜெயலலிதா உடல் நலக்குறை வால், அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சேர்க்கப் பட்டார்.
கைரேகை
அப்போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் அறிவிக்கப் பட்டார். ஏ.கே. போஸ்க்கு கட்சியின் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதா வின் கையெழு த்திற்கு பதில், கைரேகை இடம் பெற்றிருந்தது.
இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஏ.கே.போஸுக்கு வழங்கியது. அவரும் வெற்றி பெற்றார்.
ஏன் அறிவிக்க வில்லை
ஜெயலலிதா வின் கைரேகை உண்மையானது தானா என தெளிவு படுத்துமாறு திமுக சார்பில் அத் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர், சரவணன் கோரியிருந்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ள போதே, உடல் நலக்குறை வால் ஏ.கே.போஸ் மரண மடைந்து விட்டார்.
இதை காரணமாக வைத்து வேண்டு மானால் அந்த தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்க வில்லை என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், தகுதி நீக்கத்திற்கு உள்ளான 18 எம்எல்ஏ க்கள் பிரச்சினையில், உயர் நீதிமன்ற 3வது நீதிபதி, சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் நடத்தத் தடையில்லை என்றும் குறிப்பிட் டிருந்தார்.
18 பேர் சார்பிலும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலும் செய்ய வில்லை. அப்படி யிருந்தும், அந்த தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப் படவில்லை.
ஆட்சிக்கு ஆபத்து
இப்போது தேர்தல் அறிவிக் கப்பட்டு ஒருவேளை, அதில் பெரும்பாலான தொகுதி களை அதிமுக வெல்ல முடியா விட்டால், ஆட்சியே கவிழும் வாய்ப்பு உள்ளது.
எனவே 18 தொகுதி களுக்கான தேர்தலை எதிர் க்கட்சிகள் எதிர் பார்த்திருந்தன.
ஆனால், லோக்சபா தேர்தலின் போது சேர்த்தே 18 தொகுதி களுக்கும், திருப்பரங் குன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ள தாக டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகி யுள்ளன.
லோக்சபா தேர்தலுடன்
லோக்சபா தேர்தல் வரை ஆட்சியை நீடிக்க தீவிர முயற்சி எடுத்து வருவதால், ஏதேதோ காரணங் களை கூறி, தேர்தல் நடத்த விடாமல் சிலர் தேர்தல் ஆணை யத்தில்
முட்டுக் கட்டை போடுவ தாகவும் அதனால் தான் தேர்தல் தள்ளிப் போவதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
லோக்சபா தேர்தலுக்குள் தினகரன் அணி-எடப்பாடி அணியோடு இணைந்து விட்டால், அப்புறம் ஜாம் ஜாம் என தேர்தலை நடத்த ஒத்துழைப்பு நல்கப்படும் என்று கொசுறு தகவல் கூறுகிறது டெல்லி வட்டாரம்.
Thanks for Your Comments