தமிழகத்தில் 2 நாள் மழை - வானிலை மையம் !

0
தென் கிழக்கு வங்க கடலில் கடந்த வாரம் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 


வடகடலோர மாவட்டங்கள் வழியாக தரைப் பகுதியை கடந்து கேரளா சென்று விட்டது.

இதனால் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங் களிலும் டெல்டா மாவட்டங் களிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று இரவு தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதை யொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் 

புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி யுள்ளது. 

இதன் காரணமாக தமிழ கத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் 9-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.

இதற்கிடையே குமரிக் கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் 


ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் 

மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings