பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சர் மாறியதற்கு பின்னர் பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்த வண்னம் இருக்கின்றன.
ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வில் ரேங்க் முறை ரத்து, 11-ம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளி யாகின.
மேலும் தேர்வு நேரமும் 3 மணி நேரத்தி லிருந்து 2.30 மணி நேரமாகக் குறைக்கப் பட்டது.
இதனிடையே 2018-ம் ஆண்டுக் கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது.
அதன்படி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ல் நிறை வடைகிறது.
இதன் முடிவுகள் மே 23-ம் தேதி வெளி யிடப்படும். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடை கிறது.
இதன் முடிவுகள் மே 30-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1ல் தொடங்கி ஏப்ரல் 6ல் நிறை வடைகிறது.
இதன் முடிவுகள் மே 16-ம் தேதி வெளி யாகிறது.
Thanks for Your Comments