ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தற்போது உச்சக் கட்டத்தை அடைந் துள்ளது.
முதல் கட்டமாக இந்த வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
2-வது கட்டமாக இந்த வழக்கில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர்,
முன்னாள் அமைச்சர் ரமணா, விஜய பாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோ ரிடம்
நேற்று முன்தினம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி னார்கள்.
சுமார் 9 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடந்தது. முன்னாள் அமைச்சர் ரமணா பற்றி இந்த வழக்கில் பேசப்பட வில்லை.
அவரது வீட்டில் கூட சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்த வில்லை.
தற்போது புதிதாக அவரது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப் பட்டு விசாரணை நடக்கிறது.
அமைச்சர் விஜய பாஸ்கரும், முன்னாள் அமைச்சர் ரமணாவும் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அலுவலக த்தில் ஆஜரா னார்கள்.
விஜய பாஸ்கர் காலை யிலேயே சி.பி.ஐ. அலுவலகம் வந்து விட்டார். ரமணா காலை 10 மணிக்கு மேல் தான் வந்தார்.
அவர்கள் இருவரிடமும் மாலைக்கு பிறகும் விசாரணை நீடித்தது.
பல்வேறு ஆவணங் களை காட்டியும், சரவணனிடம் விசாரித்த தகவல்கள்
அடிப்படை யிலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப் பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
Thanks for Your Comments